காரில் இறந்து கிடந்த இரட்டை குழந்தைகள்; தந்தையின் மறதியால் நடந்த விபரீதம்!

 

காரில் இறந்து கிடந்த இரட்டை குழந்தைகள்; தந்தையின் மறதியால் நடந்த விபரீதம்!

எட்டுமணிநேரம் காரில் இருந்த இரட்டை குழந்தைகள் வெப்பம் தாங்காமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

காரில் இறந்து கிடந்த இரட்டை குழந்தைகள்; தந்தையின் மறதியால் நடந்த விபரீதம்!

நியூயார்க்: எட்டுமணிநேரம் காரில் இருந்த இரட்டை குழந்தைகள் வெப்பம் தாங்காமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ராக் லேண்ட் நகரைச் சேர்ந்தவர் ஜுவான் ரோட்ரிக்ஸ். இவருக்கு மரிசா என்ற மனைவியும், 4 வயதில் ஒரு மகன், லூனா மற்றும் போனெக்ஸ் என்ற ஒரு வயதாகும் இரட்டைக் குழந்தைகள் இருந்தனர்.  வேலைக்குச் செல்லும் இந்த தம்பதி, குழந்தைகளைப் பாதுகாப்பு மையத்தில் விட்டுவிட்டு சென்றுள்ளனர். 

ஜுவான், மருத்துவமனையில் வேலை செய்து வந்த நிலையில், அவர் தனது ஒரு குழந்தையைப் பாதுகாப்பு மையத்தில் விட்டுவிட்டு, இரட்டை குழந்தைகளை பின் இருக்கையில் அமர வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால்  குழந்தைகள் இருந்ததை  மறந்துவிட்ட ஜுவான், வழக்கம்போல் பணிக்குச் சென்று காரை எடுக்கும் போது  தான் அவருக்கு அதிர்ச்சி  காத்திருந்தது. காரணம்  குழந்தைகள் இருவரும் காருக்குள் மூச்சுத்திணறி வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்துள்ளனர். 

இதையடுத்து ஜுவான் உடனடியாக காவலர்களுக்கு போன் செய்து உதவி கேட்க,  சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள், குழந்தைகளைப் பரிசோதித்துவிட்டு, இருவரும் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தைகளின் மருத்துவ பரிசோதனையில், குழந்தைகள் காரில் வெப்பம் தாங்காமல் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜுவானை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது பேசிய அவர், நான் குழந்தைகளைப் பாதுகாப்பு மையத்தில் விட்டுவிட்டதாகத் தான் எனக்கு தோன்றியது. அவர்கள் இறந்து விட்டார்கள். நானே அவர்களை கொன்றுவிட்டேன்’ என்று கதறி அழுதார். 

ப்ரான்க்ஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், ஜூவானுக்கு ஒரு லட்சம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியில் வந்த ஜுவானை அவரின் மனைவி மரிசா கட்டி அழுதார். அதன்பிறகு பேசிய மரிசா,  என்னால் இதை நம்ப முடியவில்லை. இந்த இழப்பிலிருந்து நான் மீளப்போவதில்லை. அவர் ஒரு நல்ல தந்தை. குழந்தைகளைத் துன்புறுத்தும் வகையில் கூட அவர் நடந்து கொள்ளமாட்டார். அவருடைய இந்த தவறுக்கு அவரே அவரை மன்னிக்க  மாட்டார்’ என்றார்.