காய்ச்சலை கண்காணிக்க பள்ளி மாணவர்களுக்கு வெப்பநிலை கண்காணிப்பு பிரேஸ்லெட் அணியும் முறை சீனாவில் அறிமுகம்

 

காய்ச்சலை கண்காணிக்க பள்ளி மாணவர்களுக்கு வெப்பநிலை கண்காணிப்பு பிரேஸ்லெட் அணியும் முறை சீனாவில் அறிமுகம்

காய்ச்சலை கண்காணிக்க பள்ளி மாணவர்களுக்கு வெப்பநிலை கண்காணிப்பு பிரேஸ்லெட் அணியும் முறை சீனாவில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெய்ஜிங்: காய்ச்சலை கண்காணிக்க பள்ளி மாணவர்களுக்கு வெப்பநிலை கண்காணிப்பு பிரேஸ்லெட் அணியும் முறை சீனாவில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு மாணவருக்கு காய்ச்சல் இருந்தால் ஆப் மூலம் எச்சரிக்கும் வெப்பநிலை-கண்காணிப்பு பிரேஸ்லெட்கள் இன்று பெய்ஜிங் பள்ளிகளில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன் மூலம் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்படும் நபர்களை கண்காணிக்க சீனாவின் சமீபத்திய உயர் தொழில்நுட்பம் உதவுகிறது.

சீனா பொது இடங்களில் வெப்ப கேமராக்களை நிறுத்தியுள்ளது மற்றும் பெரும்பாலான இடங்களில் மக்கள் பயண வரலாற்றின் அடிப்படையில் ஒரு நபரின் கொரோனா தொற்று அபாயத்தை தீர்மானிக்கும் பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு மதிப்பீடுகள் மொபைல் ஆப்-இல் காண்பிக்கும்.

ஐந்து பெய்ஜிங் மாவட்டங்களில் நடுத்தர பள்ளி மாணவர்களுக்கு வெப்பநிலை கண்காணிப்பு பிரேஸ்லெட்கள் அணிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரெஸ்லெட்கள் நிகழ்நேர வெப்பநிலை தரவை ஒரு ஆப் மூலம் பள்ளிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களால் கண்காணிக்க முடியும்.