காய்கறி மார்க்கெட்டில் மக்கள் கூட்டத்தை குறைக்க அரசுக்கு ஒரு ஐடியா!

 

காய்கறி மார்க்கெட்டில் மக்கள் கூட்டத்தை குறைக்க அரசுக்கு ஒரு ஐடியா!

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது. ஆனால் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வரலாம் என்றும் சமூக விலகலை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் வெளியே வருவதை தடுக்க முடியவில்லை. குறிப்பாக, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்களுக்காக மக்கள் வெளியே வந்த வண்ணம் உள்ளனர். 

ttn

இந்நிலையில் மக்கள் கூட்டத்தை தவிர்ப்பதற்காக கோயம்பேடு தக்காளி கமிஷன் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர், ஜெகநாதநாயுடு ஒரு யோசனையை சொல்லியிருக்கிறார். அதாவது, கொரோனா தீவிரம் அடைந்து வரும் நிலையில் மக்கள் அதிகமாக காய்கறி வாங்க வருகிறார்கள். அதனை கட்டுப்படுத்த முடியாது. எனவே, கோயம்பேடு வியாபாரிகளை ஒவ்வொரு மண்டலத்துக்கு, தெரு முனைகளுக்கு, ஒரு உதவியாளருடன் காய்கறிகளை கொண்டு செல்லலாம். லாரியிலோ, குட்டி வண்டிகளிலோ கொண்டு சென்றால் அந்தந்த தெருக்களில் மக்கள் வாங்கிக் கொள்வார்கள். வியாபாரிகளை மண்டலம் வாரியாக பிரித்து, அடையாளச்சீட்டு கொடுத்து அனுப்பவேண்டியது மாநகராட்சியின் பொறுப்பு. இவ்வாறு செய்தால் மக்களின் கூட்டத்தை குறைக்க இயலும் என்று கூறியிருக்கிறார்.