காய்கறிகளின் விலை சரிவால் பொதுமக்கள் மகிழ்ச்சி.. இன்றைய சந்தை நிலவரம்!

 

காய்கறிகளின் விலை சரிவால் பொதுமக்கள் மகிழ்ச்சி.. இன்றைய சந்தை நிலவரம்!

கடந்த சில மாதங்களாக மழையின் காரணமாகவும், உள்நாட்டு வரத்து குறைந்ததின் காரணமாகவும் காய்கறிகள் விலை பன்மடங்கு அதிகரித்தது

கடந்த சில மாதங்களாக மழையின் காரணமாகவும், உள்நாட்டு வரத்து குறைந்ததின் காரணமாகவும் காய்கறிகள் விலை பன்மடங்கு அதிகரித்தது. குறிப்பாக, வெங்காயம், முருங்கை உள்ளிட்ட பொருட்கள் வரலாறு காணாத விலை உயர்வை அடைந்தது. அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். 

ttn

இன்றைய கோயம்பேடு மார்க்கெட் நிலவரத்தின் படி, பெரிய வெங்காயம்- ரூ.20, சின்ன வெங்காயம்- ரூ.40-50, தக்காளி கிலோ- ரூ.15, முருங்கைக்காய்- ரூ.40, கத்திரிக்காய் – ரூ.20, கேரட்- ரூ.30, கோவைக்காய் ரூ.15, உருளைக்கிழங்கு- ரூ.25, சேனை மற்றும் பூசணி ரூ.25 முதல் 35க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் ரூ.400க்கு மேல் விற்கப் பட்டு வந்த முருங்கை இப்போது பன்மடங்கு குறைந்துள்ளது.

ttn

சரியாகக் காய்கறிகளின் விளைச்சலின் போது மழை பெய்ததால், விளைச்சல் அதிகரித்துள்ளது என்றும் அதனால் தான் காய்கறி விலை குறைந்துள்ளது என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.