காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம்!

 

காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம்!

இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று  புதிதாக 447 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,674 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது. அதேபோல் சென்னையில் 5,637 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக கோயம்பேடு சந்தை தொடர்பு மூலம் இதுவரை 1500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சந்தை மூடப்பட்டு விட்டது.  இதன் காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்ததால் அதன் விலையும் அதிகரித்தது. இருப்பினும் இந்த நிலை திருமழிசை மார்கெட் செயல்பாடுகளுக்கு வந்த பிறகு காய்கறிகள் விலை குறைந்து வருகிறது. 

இந்நிலையில் திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் இருந்து 350 லாரிகளில் 4000 டன் காய்கறிகள் வந்துள்ளது.அதன்படி ஒரு கிலோ காய்கறிகளின் இன்றைய விலை விவரம் இதோ:-

  • தக்களி- 10-15 ரூபாய்
  • பெரிய வெங்காயம்- 15 -20 ரூபாய்
  • உருளைக்கிழங்கு- 25 -30 ரூபாய்
  • சாம்பார் வெங்காயம்-40 -50 ரூபாய்
  • கேரட் -15 -20 ரூபாய்
  • பீன்ஸ்- 50 -70 ரூபாய்
  • பீட்ரூட்- 20-25 ரூபாய்
  • சவ்சவ்- 15-20 ரூபாய்
  • முள்ளங்கி -20 ரூபாய்
  • கோஸ்- 10 -15 ரூபாய்
  • வெண்டைக்காய்- 20- 25 ரூபாய்
  • கத்திரிக்காய்- 15- 20 ரூபாய்
  • முருங்கைக்காய் 25 -30 ரூபாய்
  • காளிப்ளவர்- 15 -20 ரூபாய்
  • சேனைக்கிழங்கு- 25 ரூபாய்
  • பச்சைமிளகாய்-20- 25 ரூபாய்
  • இஞ்சி-60 -70 ரூபாய்
  • அவரைக்காய்- 20- 25 ரூபாய்