காப்பான் படத்தின் வீடியோ பாடல் ரிலீஸ்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

 

காப்பான் படத்தின் வீடியோ பாடல் ரிலீஸ்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள காப்பான்  படத்தின் வீடியோ பாடல் ஒன்று இன்று வெளியாகவுள்ளது. 

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள காப்பான்  படத்தின் வீடியோ பாடல் ஒன்று இன்று வெளியாகவுள்ளது. 

kaappan

அயன், மாற்றான் படங்களை அடுத்து சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவாகியுள்ள படம் காப்பான். இப்படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா, பொமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.  

kaappan

இப்படத்தின் பாடல்கள், டிரைலர் போன்றவை வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற  நிலையில் இப்படம் செப்டம்பர் 20-ம் தேதி வெளியாகிறது. 

 

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஹே அமிங்கோ என்ற பாடலின் வீடியோ  இன்று இரவு 7 மணிக்கு வெளியாக இருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து  #HeyAmigoVideoSong என்ற ஹேஷ்டாக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. 

சூர்யா – கே.வி. ஆனந்த் வெற்றி கூட்டணி கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது  படத்தின் மீதான  எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.