காந்திகணக்கில் சாப்பாடு போட்ட, 96 வருட நாயுடு மெஸ்!

 

காந்திகணக்கில் சாப்பாடு போட்ட, 96 வருட நாயுடு மெஸ்!

ஆமாம்,கையில் காசில்லாதவர்களுக்கு காந்தி கணக்கில் சோறு போட்ட ஒரு மெஸ் இப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது. அரக்கோணம், ஸ்டூவர்ட் பேட்டையில் இருக்கும் தாசில்தார் தெருவில், ஸ்ரீ குமாரிவிலாஸ் நாயுடு மெஸ்தான் அது.1924 ம் ஆண்டு ஆவனிமாதத்தில் சஞ்சீவ நாயுடு என்பவர் துவங்கிய இந்த உணவகம்,வெங்கய்யா-ராஜம்மாள்,சீதாபதி-பத்மா-செல்லாம்மாள் என்று மூன்று தலைமுறை கடந்து இப்போது நான்காவது தலைமுறை வாரிசான சந்தானக்கிருஷ்ணனால் நடத்தப்படுகிறது.நடத்துபவர்கள் மட்டுமல்ல,சாப்பிட வரும் வாடுக்கையாளர்களும் தலைமுறை தலைமுறையாக வந்து கொண்டு இருப்பவர்கள்தான்

ஆமாம்,கையில் காசில்லாதவர்களுக்கு காந்தி கணக்கில் சோறு போட்ட ஒரு மெஸ் இப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது. அரக்கோணம், ஸ்டூவர்ட் பேட்டையில் இருக்கும் தாசில்தார் தெருவில், ஸ்ரீ குமாரிவிலாஸ் நாயுடு மெஸ்தான் அது.1924 ம் ஆண்டு ஆவனிமாதத்தில் சஞ்சீவ நாயுடு என்பவர் துவங்கிய இந்த உணவகம்,வெங்கய்யா-ராஜம்மாள்,சீதாபதி-பத்மா-செல்லாம்மாள் என்று மூன்று தலைமுறை கடந்து இப்போது நான்காவது தலைமுறை வாரிசான சந்தானக்கிருஷ்ணனால் நடத்தப்படுகிறது.நடத்துபவர்கள் மட்டுமல்ல,சாப்பிட வரும் வாடுக்கையாளர்களும் தலைமுறை தலைமுறையாக வந்து கொண்டு இருப்பவர்கள்தான்.

fod

அரக்கோணம் நகரில் வாழும் சைவர்களைத் தவிர இந்த உணவகத்தில் ஒரு முறையாவது சாப்பிடாதவர்கள் யாருமே இருக்க முடியாது.
ஒரு சாப்பாடு 55 காசு,ஒரு மட்டன் 50 காசு,ஆம்லெட் 15 காசுக்கு விற்றது தனக்கே தெரியும் என்கிறார் சந்தானகிருஷணன்.இப்போது சாப்பாடு 75 ரூபாய்,சிக்கன் 75 ரூபாய்,மட்டன் 125 ரூபாய்,ஆம்லெட் 15 ரூபாய்க்குத் தருகிறார்கள். சைட் டிஷ் எதுவும் ஆர்டர் செய்யாதவர்களுக்கும் சிக்கன் குழம்பு ,மீன் குழம்பு உண்டு.மீனுக்குமட்டும் அன்றைய சந்தை நிலவரத்தை பொறுத்து விலை மாறும்.முழுச்சாப்பாடுதான்,ஒருதடவைக்கு இரண்டு தடவை ‘ போதுமா,போதுமா’ என்று கேட்டுவிட்டுத்தான் உங்களை எழுந்துகொள்ள அனுமதிக்கிறார்கள்

fish

கறிமசாலாவில் இருந்து,ரசப்பொடி வரை அன்றன்றைக்கு அரைத்துக் கொள்கிறார்கள். மிள்காய் தவிர எல்லா காய்கறிகளும் ஹைபிரீட் ஆகிவிட்டதால் பழைய சுவையைக் கொண்டுவர முடியவில்லை என்கிறார். ஆனால்,வாடிக்கையாளர்கள் எத்தனை வருடங்களானாலும் நாயுடு மெஸ்ஸின் டேஸ்ட் மாறவே இல்லை என்கிறார்கள்.

food

காலை 11.30க்கு மதிய உணவு பரிமாறுகிறார்கள். மாலை 3.30 வரை வாடிக்கையாளர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். எதையும் மீதம் வைத்து சூடுசெய்தோ,ஃபீரிசரில் வைத்தோ மறுநாள் தருவதெல்லாம் இல்லை.அன்று சமைப்பது அன்றே தீர்ந்து விடுகிறது.இப்போது ஏரி மீன் என்கிற பெயரில் பன்னை குட்டை மீன்களை வாங்குவதில்லை.கடல் மீன் கிடைக்காத நாட்களில் மீன்குழம்பு இல்லை.இரவு வெறும் இட்லி தோசைமட்டும் தருகிறார்கள். அதற்கும் ரெகுலர் கஸ்டமர்கள் இருக்கிறார்கள். 96 வருடங்களில் அரக்கோணம் இன்று ஒரு நகரமாகி இருக்கிறது. நாயுடு மெஸ் மட்டும்,அதே காந்திகாலத்து நம்பிக்கைகளுடன் இப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டு இருக்கிறது.