காத்திருக்கும் எடப்பாடி.. டீலில் விட்ட மோடி! தினகரன் பக்கம் சாய்கிறதா பாஜக?

 

காத்திருக்கும் எடப்பாடி.. டீலில் விட்ட மோடி! தினகரன் பக்கம் சாய்கிறதா பாஜக?

பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டும் கிடைக்காததால் முதல்வர் பழனிசாமி தரப்பு அப்செட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டும் கிடைக்காததால் முதல்வர் பழனிசாமி தரப்பு அப்செட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமருடன் ஆலோசிக்க நேரம் கேட்டு அவரது அலுவலகத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த 30-ஆம் தேதி டெல்லிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கிட்டதட்ட 5 நாட்கள் கடந்தும், அந்த கடிதத்திற்கு பிரதமர் அலுவலகம் எந்த எதிர்வினையும் ஆற்றாததால், முதல்வர் தரப்பு படு அப்செட்டாகியுள்ளதாம்.

இருப்பினும், மோடி நிச்சயம் நேரம் ஒதுக்குவார் என்ற நம்பிக்கையில், ஆலோசனையின் போது என்னென்ன கோரிக்கைகள் வைப்பது என்ற லிஸ்ட் தயாரிக்கும் பணியில் எடப்பாடி இறங்கிவிட்டாராம். 

அதன்படி, தன்னுடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் சில அதிகாரிகளையும் அழைத்துச் செல்ல திட்டமிட்டிருக்கும் எடப்பாடி, தமிழகத்திற்கு தேவையான முக்கிய திட்டங்கள் குறித்தும் நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் நிலுவையில் உள்ள நிதியை விரைவாக தரக்கோரியும் மோடியிடம் வலியுறுத்துவார் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

modi

இது இப்படி இருக்க, எடப்பாடியை விட ஆட்சியில் இல்லாத தினகரனுக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு குறித்து டெல்லி பாஜக தலைமைக்கு நெருக்கமான உளவுத்துறை அதிகாரி ஒருவர் ரிப்போர்ட் கொடுத்துள்ளார்.

அதை மையமாக வைத்து பாஜக தலைமை நடத்தி வரும் ஆலோசனைகள் குறித்து எடப்பாடிக்கு தெரிய வந்த நிலையில், தனது செயல்பாடுகளை பட்டியலிடவே டெல்லிக்கு செல்கிறார் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

அதுமட்டுமின்றி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி குறித்து கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கு ஒன்று டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அக்டோபர் 12-ந்தேதிக்குள் பதிலளிக்க கோரி எடப்பாடி பழனிசாமிக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக மோடியை சந்தித்து பேசவே எடப்பாடி நேரம் கேட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதை அனைத்தையும் முன்கூட்டியே அறிந்து தான் நேரம் ஒதுக்காமல் பிரதமர் காலம் தாழ்த்தி வருவதாக புலம்புகிறார்கள் அரசுக்கு நெருக்கமானவர்கள். இறுதியாக, எடப்பாடியை சந்திக்க மோடி நேரம் ஒதுக்கும் பட்சத்தில் பரபரப்பான அரசியல் நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவே சொல்லப்படுகிறது.