காதுல பிரச்சனை… தொண்டையில் ஆபரேஷன்… வலியில் துடித்த சிறுமி!

காதுல பிரச்சனை… தொண்டையில் ஆபரேஷன்… வலியில் துடித்த சிறுமி!

தமிழகத்தில், நீட் தேர்வு எல்லாம் வருவதற்கு முன்பே ஒழுங்காக படித்து பட்டம் வாங்கி தான் மருத்துவர்களாக சேவை செய்ய வருகிறார்கள். ஆனால், இதில் எத்தனைப் பேர் நிஜ மருத்துவர்கள், எத்தனைப் பேர் போலி மருத்துவர்கள், எத்தனை பேர் உண்மையான அக்கறையோடு மருத்துவம் பார்த்து வருகிறார்கள் என்பதெல்லாம் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

ஆபரேஷன் செய்யப் போனா கத்திரிக்கோலை வயித்துக்குள்ள வெச்சு தைச்சு அனுப்புற மருத்துவர்களின் ஆரம்பித்து, உடம்புக்குள்ள சொருகின ஊசியை அஞ்சாறு வருஷம் கழித்து, மறந்துப் போய் வெச்சுட்டேன்னு எடுத்து விடுகிற மருத்துவர்கள் வரையில் இதில் அடக்கம். இந்நிலையில், சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த செல்வம் என்பவரது மகள் ராஜஸ்ரீக்கு (9) காதில் கம்மல் போடும் இடத்தில் கட்டி இருந்துள்ளது.

girl

வலி அதிகமாகவே அரசு உதவிபெறும் மருத்துவமனையில் மகளை சேர்ந்துள்ளனர். சிறுமியைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் கட்டியை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்ற முடிவெடுத்துள்ளனர். நேற்று அறுவை சிகிச்சையும் நடைபெற்றுள்ளது. ஆனால் மருத்துவர்களின் அலட்சியத்தால் கட்டியால் காது வலிக்கிறது என்று சேர்ந்த சிறுமியின் தொண்டையில் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள் மருத்துவர்கள். அறுவை சிகிச்சை முடிந்தபின், மகளின் தொண்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  சிறுமியின் பெற்றோர் மருத்துவர்களிடம் விசாரித்ததில், வேறொரு சிறுவனுக்கு செய்ய வேண்டியதற்கு பதில் தவறுதலாக சிறுமிக்கு செய்ததாகச் சொல்லி, இழப்பீடு வழங்க மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இன்னும் என்னென்ன துறைகளில் இப்படி அலட்சியமாக இருக்கப் போகிறார்களோ…. ?