காதல் நகருக்கு ஜாலி விசிட் அடித்த ‘பிக் பாஸ்’ ரித்விகா

 

காதல் நகருக்கு ஜாலி விசிட் அடித்த ‘பிக் பாஸ்’ ரித்விகா

பிக் பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகா காதல் நகரமான ஃபிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார்.

சென்னை: பிக் பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகா காதல் நகரமான ஃபிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார்.

இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்த ரித்விகா, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மீண்டும் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகவுள்ள ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தில் ரித்விகா ஒப்பந்தமாகியுள்ளார்.

பிக் பாஸ் டைட்டிலை வென்ற ரித்விகாவிற்கு ட்விட்டரில் ஆர்மிகள் பல உள்ளன. இந்நிலையில், சமீபத்தில் ஃபிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்ற நடிகை ரித்விகா தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

காதல் நகரமான பாரீஸுக்கு செல்ல வேண்டும் என்ற ரித்விகாவின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியுள்ளது. ஈஃபிள் டவர் அருகே ரித்விகா எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், பிக் பாஸ் டைட்டிலை வென்றபோது பெற்ற தொகையை இப்படியே ஊர் சுற்றி ரித்விகா கரைப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.