காதல் திருமண விவகாரத்தை காணொளி விசாரணை மூலம் முடித்துவைத்த சென்னை உயர்நீதிமன்றம்

 

 காதல் திருமண விவகாரத்தை காணொளி விசாரணை மூலம் முடித்துவைத்த சென்னை உயர்நீதிமன்றம்

புதுச்சேரியில் காதல் திருமண விவகாரத்தை காணொளி காட்சி மூலம் விசாரணை நடத்தி காதல் மனைவியை சேர்த்து வைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்

புதுச்சேரியில் காதல் திருமண விவகாரத்தை காணொளி காட்சி மூலம் விசாரணை நடத்தி காதல் மனைவியை சேர்த்து வைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்

புதுச்சேரியை அடுத்த, அரியாங்குப்பம் தேங்காய்திட்டு வீதியை சேர்ந்தவர் மணிகண்டன், அவர் அதே பகுதியை சேர்ந்த மருத்துவம் படிக்கும் மாணவி ராகவி என்ற பெண்ணை காதிலித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்களுக்கு  கடந்த 12 ஆம் தேதி  மைலம் முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில்  பெண்ணின் தந்தை  அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் தன் மகளை காணவில்லை என்று புகார் அளித்தார் தகவல் அறிந்த தம்பதியினர் தங்கள் வழக்கறிஞர் உடன் அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் ஆஜராகினார்கள். அப்போது போலிசார் நடத்திய விசாரணையில்,அந்த பெண் தாம் விரும்பி தான் மணிகண்டனை திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார். இருப்பினும் விசாரணையின் போதே அப்பெண்ணின் தந்தை அவரை தன்னுடன் இழுத்துச் சென்றுள்ளார்.

highcourt

இது தொடர்பாக மணிகண்டன் தன் மனைவியை மீட்டு தர கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இவ் மனுவை  நீதிபதிகள் கிருபகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அப்பெண்ணுக்கு மனநலம் பாதிக்கப்படுள்ளதாக கூறி அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தமால் தவிர்த்தனர், அப்போது நீதிபதிகள் மறுநாள் அந்த பெண்ணுடன் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் விசாரணை நடைப்பெறும் என தெரிவித்தார். அதே போல் மறுநாள் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம்  விசாரணையை தொடங்கினர். அப்போது  அரசு வழக்கறிஞர், மனுதாரர் மணிகண்டன் அவரின் மணைவி ராகவி, ராகவியின் தந்தை , அரியாங்குப்பம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்,  ஆகியோர் தனித்தனியாக வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆஜரானார்கள். இதில் சம்மந்தப்பட்ட ராகவியிடம் நீதிபதிகள் விசாரணை செய்தபோது ராகவி தாம் முதலாம் ஆண்டு மருத்துவம் படிப்பதாகவும்  தன் சம்மதத்யுடன் தான் திருமணம் நடந்ததாகவும் காவல்துறையினர் தன் விருப்பத்திற்கு எதிராக தன் பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டார்கள் என்றும் தன் கணவருடன் தாம் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், மீண்டும் படிப்பை தொடரப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

காதல் திருமணம்

இதனையொட்டி அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் மனுதாரர் பக்கம் நியாயம் இருப்பதாகவும் மாணவி ராகவி மேஜர் என்றும் இருவரும் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்து உள்ளதால் அவர்கள் இருவரும் சேர்ந்து வாழலாம் என்று தீர்ப்பலித்தனர். மேலும் அந்த தம்பதியர்களுக்கு எந்த விதமான அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க போலிசார்  பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று காவல் துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. காதல் திருமண விவகாரத்தை காணொளி மூலம் விசாரித்து நீதிமன்றம் அளித்த தீர்ப்பு காதல் தம்பதிகளை மகிழ்வடையச்செய்துள்ளது.