காதல் சைக்கோவான விஜய் தேவரகொண்டா: டியர் காம்ரேட் பட ட்ரைலர் இதோ… 

 

காதல் சைக்கோவான விஜய் தேவரகொண்டா: டியர் காம்ரேட் பட ட்ரைலர் இதோ… 

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள டியர் காம்ரேட் படத்தின் தமிழ் ட்ரைலர் வெளியானது. 

சென்னை: நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள டியர் காம்ரேட் படத்தின் தமிழ் ட்ரைலர் வெளியானது. 

கீதா கோவிந்தம் படத்தை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா- ரஷ்மிக்கா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டியர் காம்ரேட். பரத் கம்மா இயக்கியிருக்கும் இப்படத்தை  மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன் வெளியான இந்த படத்தின் டீசரும், சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஒரே டேக்கில் உருவான ‘கேண்டீன் சாங்’கும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தெலுங்கு, மலையாளம், தமிழ் போன்ற மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரிக்க செய்துள்ளது. 

இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் ட்ரைலர் தமிழில் வெளியானது. அதில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீராங்கனையான ராஷ்மிகா மீது விஜய் தேவரகொண்டா காதல் வயப்படுகிறார். காதல், ஆக்‌ஷன், தோல்வி, பயணம் என்று உருவாகியுள்ள ட்ரைலர் ரசிகர்களிடையே   நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் வரும் 26ம் தேதி திரைப்படம் வெளியாகவுள்ளது.