காதல் கணவருடன் நைட் அவுட் சென்ற சாயிஷா! வைரலாகும் புகைப்படம்!

 

காதல் கணவருடன் நைட் அவுட் சென்ற சாயிஷா! வைரலாகும் புகைப்படம்!

ஆர்யா- சாயிஷா ஜோடி இருவரும் இணைந்து ஐரோப்பா நாட்டில் நைட் அவுட் சென்றபோது எடுத்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. 

சென்னை: ஆர்யா- சாயிஷா ஜோடி இருவரும் இணைந்து ஐரோப்பா நாட்டில் நைட் அவுட் சென்றபோது எடுத்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. 

ஆர்யா- சாயிஷா ஜோடி திருமணத்திற்கு முன்பு கஜினி காந்த் என்ற படத்தில் நடித்திருந்தனர். அதையடுத்து தற்போது மீண்டும் இணைந்து டெடி  என்ற படத்தில் நடித்து வருகின்றனர். சக்தி சௌந்தர ராஜன் இயக்கிவரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கியது. 

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில்,இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஐரோப்பா நாட்டில் தொடங்கியது. இந்த நிலையில் இருவரும் சேர்ந்து டின்னருக்காக நைட் அவுட் சென்றுள்ளனர். அப்போது அங்க எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சாயிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\

அவர் வெளியிட்ட அந்த புகைப்படம் ஒரு மணி நேரத்தில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்ஸ்களை குவித்து, வைரலாக பரவி வருகிறது.