காதலில் இந்த ராசிக்கெல்லாம் தான் அதிர்ஷ்டம் உண்டு!

 

காதலில் இந்த ராசிக்கெல்லாம் தான் அதிர்ஷ்டம் உண்டு!

தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். வீட்டு சூழ்நிலையில் சாதகமான சில மாற்றங்களை செய்வீர்கள். 

23.09.2019 (திங்கட்கிழமை)
நல்ல நேரம் 
காலை 6 மணி முதல் 7 வரை
மாலை 4.45 மணி முதல் 5.45 வரை
ராகு காலம் 
காலை 7.30  மணி முதல் 9 வரை
எமகண்டம் 
காலை 10.30 மணி முதல் 12 வரை
சந்திராஷ்டமம் 
பூராடம்
பரிகாரம் 
தயிர்

மேஷம் 
உங்களது கிரக நிலைகளின் படி இன்றைய நாளின் பிற்பகுதியில் நிதி நிலைமை மேம்படும். தொடர்பு கொள்வதும் கலந்துரையாடலும் நன்றாக அமையாவிட்டால், நீங்கள் அமைதியை இழந்து பிற்காலத்தில் வருத்தப்படக் கூடிய வகையில் பேச நேரிடலாம். சிந்தித்துப் பேசுங்கள். மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி ய நாள். 
அதிர்ஷ்ட எண்: 6
ரிஷபம் 
இன்று உங்களை எரிச்சலடையச் செய்யும், அசெளகரியமாக்கும் வகையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பண லாபங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளின்படி இருக்காது. உங்கள் வீட்டைச் சுற்றி உடனடியாக சில சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பயணம் ஆனந்தமயமானதாக அதிக பயன் தருவதாக இருக்கும். 
அதிர்ஷ்ட எண்: 5
மிதுனம் 
எல்லோருக்கும் உதவி செய்ய நீங்கள் தயாராக இருப்பதால் களைப்படைவீர்கள். தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். நீங்கள் கூடுதல் தாராளமாக இருந்தால், நெருக்கமானவர்கள் உங்களிடம் வரம்பு மீறி சாதக நிலை எடுப்பர். பெண் நண்பர் உங்களை ஏமாற்றக் கூடும். இன்று வேலையில் அனைத்தும் நன்றாகவே இருக்கும். உங்களது மூட் நாள் முழுவதும் சிறப்பாக இருக்கும். பிரச்சனைகளின் போது விரைவாக செயல்படுவது, அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். 
அதிர்ஷ்ட எண்: 3
கடகம் 
இன்றைய பொழுதுபோக்கில் விளையாட்டுகளும் வெளிப்புற நிகழ்ச்சிகளும் இருக்க வேண்டும். அதிக ஆதாயம் தரும் நாள் அல்ல. எனவே பண நிலைமையை சோதித்து செலவுகளை கட்டுப்படுத்துங்கள். நீங்கள் அதிகம் கஷ்டப்படாமல் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க பொருத்தமான நாள். உங்கள் வழியில் யார் குறுக்கிட்டாலும் பணிவுடன் இருங்கள். 
அதிர்ஷ்ட எண்: 7
சிம்மம் 
மகிழ்ச்சியான சந்திப்புகள் இன்றைய நாளை நல்ல மன நிலையில் வைத்திருக்கும். இன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம். ஆனால் அதிகரிக்கும் செலவு, உங்களை சேமிக்க விடாமல்  செய்யும். பயணம் செல்வதாக இருந்தால் எல்லா ஆவணங்களையும் எடுத்துக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யவும். இன்று உங்கள் திருமண பந்தத்தின் இனிமயான நாள். 
அதிர்ஷ்ட எண்: 5
கன்னி 
இன்று ரிலாக்ஸ் ஆகவும் அனுபவிப்பதற்கேற்ற மன நிலையிலும் இருப்பீர்கள். புத்திசாலித்தனமான முதலீடுகளுக்கு தான் பலன் கிடைக்கும். எனவே கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எங்கே போடுகிறோம் என்பதில் கவனமாக இருங்கள். நீங்கள் எதிர்பார்த்த அங்கீகாரமும் வெகுமதியும் தள்ளிப் போவதால், ஏமாற்றம் ஏற்படும் பயணம் பலன் தரும். 
அதிர்ஷ்ட எண்: 4
துலாம் 
சிக்கலான சூழ்நிலையில் நம்பிக்கையை இழக்க வேண்டாம். சாப்பாட்டின் சுவையை அறிய உப்பு தேவைப்படுவதைப் போல, மகிழ்ச்சியின் மதிப்பை அறிய மகிழ்ச்சியின்மையும் அவசியம். உங்கள் மனநிலையை மாற்ற சில நிகழ்ச்சிக்குச் செல்லுங்கள்.  யாராவது உங்களுக்கு அதிர்ச்சி தரலாம், கவனமாக இருக்கவும். கடவுள் உதவுவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 
அதிர்ஷ்ட எண்: 6
விருச்சிகம் 
உங்களை நீங்களே தேவையில்லாமல் கண்டித்துக் கொள்வது உற்சாகத்தைக் குறைக்கும். அனைத்து வாக்குறுதிகளும் நிதி பரிவர்த்தனைகளும் கவனமாக கையாளப்பட வேண்டும். காதலில் இன்று உங்களுக்கு மிக அதிர்ஷ்டமான நாள். 
அதிர்ஷ்ட எண்: 8
தனுசு 
சமயோசித புத்தி மற்றும் புரிதலுடன் நீங்கள் செய்யும் தொடர்ச்சியான முயற்சியால் வெற்றி உறுதியாகும் என்பதால் பொறுமையாக இருங்கள். இருப்பிடத்துக்கான முதலீடு லாபகரமாக இருக்கும்.  பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. 
அதிர்ஷ்ட எண்: 5
மகரம் 
அபரிமிதமான சக்தியாக இருப்பீர்கள். ஆனால் வேலையில் ஏற்படும் அழுத்தம் எரிச்சல் அடையச் செய்யும். தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். வீட்டு சூழ்நிலையில் சாதகமான சில மாற்றங்களை செய்வீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 5
கும்பம் 
ஓய்வை அனுபவிக்கப் போகிறீர்கள். அவசரத்தில் முதலீடு செய்யாதீர்கள். எல்லா கோணத்திலும் ஆராயாவிட்டால் நட்டம் நிச்சயம். குடும்பத்தினர் சின்ன பிரச்சினையை பெரிதாக்குவார்கள்.  தொழிலில் நிபுணத்துவத்துக்கு சோதனை ஏற்படும். முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். கூர்மையாக கவனிக்கும் திறன் மற்றவர்களை ட நீங்கள் முன்னே செல்ல உதவியாக இருக்கும். 
அதிர்ஷ்ட எண்: 3
மீனம் 
இன்று அமைதியாக, டென்சன் இல்லாமல் இருங்கள். இன்று முதலீடுகள் தவிர்க்கப்பட வேண்டும். தூரமான இடத்தில் இருந்து உறவினர்கள் இன்று உங்களை தொடர்பு கொள்ளலாம். திருமணம் நிச்சயமானவர்கள், தாங்கள் திருமணம் செய்யப் போகும் நபரால் அதிக மகிழ்ச்சி அடைவார்கள். கடின உழைப்பு மற்றும் பொறுமையின் மூலம் இலக்குகளை அடைவீர்கள். தகவல் தொடர்புகளை கவனமாகக் கையாள வேண்டும். 
அதிர்ஷ்ட எண்: 9