காதலிக்காக கிஃப்ட் கொடுப்பாய்ங்க சரி… கட்டை விரலையெல்லாமா கொடுப்பாங்க..!?

காதலிக்காக கிஃப்ட் கொடுப்பாய்ங்க சரி… கட்டை விரலையெல்லாமா கொடுப்பாங்க..!?

காதலிக்காக என்னெனமோ செய்கிறார்கள் இந்த காலத்து பசங்க! அதுக்காக இப்படியா செய்வாங்க?! மிச்சிகனை சேர்ந்த கார்சன் சிட்டியை சேர்ந்த ஐடென் அட்கின்ஸ் (Aiden Adkins) என்பவர் தனது காதலிக்காக மரத்தாலான ஒரு கிஃப்ட் கொடுக்க ஆசைப்பட்டிருக்கிறார்.ஆசைப்பட்டதில் தப்பில்லை,அந்த பொம்மையையும் அவர் கையாலேயே செய்யணும்னு முடிவெடுத்ததுதான் விபரீதத்தில் போய் முடிந்திருக்கிறது !

gift

வீட்டில் உட்கார்ந்து பொம்மை செய்ய ஆரம்பித்திருக்கிறார்.கிட்டத்தட்ட அவர் நினைத்த மாதிரியே வந்திருக்கிறது… முழுவதும் முடிப்பதற்குள் எதிர்பாராத விதமாக ஐடெனின் கட்டை விரல் கத்தி பட்டு துண்டாகிவிட்டது. இது நடந்தது ஏப்ரல் மாதத்தில். ஆனால் இப்போது அவரின் கட்டை விரலுக்கு மாற்றாக மருத்துவர்கள் ஒரு அறுவை சிகிச்சையை செய்திருக்கின்றனர்.அதாவது, ஐடெனின் கால் விரல்களில் ஒன்றை கட்டை விரலாக மாற்றியுள்ளனர்! மேலும் அந்த மாற்றம்  நடைபெற்று இப்போது அது பக்காவாக செயல்படுகிறதாம்! 

டெய்லி மெயில், “ஐடெனின் குடும்பம் அவரின் கட்டைவிரலுக்காக காரேஜ்  முழுவதும் தேடியபோது ஒன்றும் அகப்படவில்லையெனவும், சிகிச்சைக்கு செல்வதற்கு 4மாதங்கள் முன்னர் வரை ஐடென் கட்டைவிரல் இல்லாமல் இருந்தார், மேலும் மருத்துவர்கள் ஐடெனின் காலின் விரல் ஒன்றை கட்டைவிரலாக பயன்படுத்தினர். 

boy

ஐடென் மருத்துவர்களிடம் கட்டைவிரல் இல்லாமல் சென்றபோது அவருக்கு தையல் போட்டிருக்கிறார்கள்,பின்னர் ஐடென் மருத்துவர்களிடம்  தன் கட்டைவிரலுக்கு காலின் விரல் பொருத்த சம்மதித்து ஆபரேஷன் செய்து கொண்டார். ஐடென் தனது முகநூலில் அவரின் கட்டைவிரல் நன்கு செயல்படும் விடீயோக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டு “இப்போது நான் நன்றாக உள்ளேன், எல்லாம் சரியாக உள்ளது! இப்போது என்னால் தம்ப்ஸ் அப் செய்ய முடிகிறது! எல்லோரும் எனது கட்டைவிரல் செயல்படுவதை ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள்! என் கால் வீரல்களிலிருந்து ஓன்றை எடுத்து எனது கைக்கு வைத்துள்ளேன். இன்னும் 2வாரங்களில் தையல் பிரிக்கப்பட்டு கட்டைவிரலில் வைக்கப்பட்டுள்ள பின் (pin) அகற்றப்பட்டுவிடும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

எங்க ஊர்ப் பக்கம் காதலுக்காக கட்டை விரலை வெட்டிக்கூட தருவேன்னு பசங்க சீரியஸா சவால் விடுவாங்க…நீ செஞ்சு காட்டிட்டியே ப்ரோ..!