காதலர் தினத்துக்கு பிரபுதேவா கொடுத்த பரிசு

காதலர் தினத்துக்கு பிரபுதேவா கொடுத்த பரிசு

நடிகர் பிரபு தேவா தேவி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்த நடிகர் பிரபு தேவா, அதன்பிறகு இந்தியில்  வருண் தவான் மற்றும் ஷ்ரத்தா கபூருடன் இணைந்து ஸ்ட்ரீட் டான்சர் 3டி என்னும் படத்தில் நடித்தார். அந்த படம் திரைக்குவர காத்திருக்கிறது. 

இந்நிலையில் திரிஷா இல்லேனா நயன்தாரா,  அன்பானவன் அடங்காதவன் அசாராதவன் படங்களின் இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து புதியப்படம் ஒன்றில் நடித்துவருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக “காதலன் ரிட்டன்ஸ்” என்னும் பெயர் வைக்கப்பட்டிருந்தது. 

பரதன் பிக்சர்ஸ் தயாரித்துவரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் காதலர் தின பரிசாக இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். ஃபர்ஸ்ட் லுக்கில் படத்தின் பெயர் பஹீரா என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பிரபுதேவா வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.