காதலரை கரம்பிடித்த பிரபல டிவி தொகுப்பாளினி ஷர்மிளா தாப்பா: குவியும் வாழ்த்து!

 

காதலரை கரம்பிடித்த பிரபல டிவி தொகுப்பாளினி ஷர்மிளா தாப்பா: குவியும் வாழ்த்து!

பிரபல டிவி தொகுப்பாளினி  ஷர்மிளா தாப்பாவுக்கும் காதலர் ரகுவுக்கும்  சென்னையில்  நேற்று திருமணம் நடைபெற்றது. 

சென்னை: பிரபல டிவி தொகுப்பாளினி  ஷர்மிளா தாப்பாவுக்கும் காதலர் ரகுவுக்கும்  சென்னையில்  நேற்று திருமணம் நடைபெற்றது. 

thapa

பிரபல நகைச்சுவை சேனலில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் ஷர்மிளா தாப்பா. நேபாளியான இவர் தமிழ் பேசும் உச்சரிப்பை கண்டு பலரும் அவரது ரசிர்களாக மாறினர். இதையடுத்து இவர் அஜித்தின் வேதாளம், விஸ்வாசம் உள்ளிட்ட சில படங்களிலும் காமெடி வேடத்தில் நடித்துள்ளார்.

thapa

இந்நிலையில்,  தொகுப்பாளினி ஷர்மிளா தாப்பாவுக்கும், உதவி நடன இயக்குநர்  ரகுவுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. சென்னை அமைந்தகரையில் உள்ள ஓர் அம்மன் கோயிலில் நடந்த இந்த திருமண நிகழ்ச்சியைத் தொடர்ந்து நேற்று மாலை புரசைவாக்கத்தில்  திருமண  வரவேற்பு நிகழ்ச்சியும்  நடைபெற்றது.

thapa

இதுகுறித்து பிரபல  இணையதள ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ள அவர், ‘நாங்கள் பத்து  வருடங்களாகக் காதலித்து தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளோம். எங்கள் இருவீட்டாரின் சம்மதத்தை வாங்கவே எங்களுக்கு இவ்வளவு நாள் தேவைப்பட்டது. கணவர் ரகு பிருந்தா மாஸ்டர், பாபா பாஸ்கர் மாஸ்டர் என பல நடன இயக்குநர்களுக்கு உதவி நடன இயக்குநராக பணிபுரிந்து வருகிறார்’ என்றார்.

ஷர்மிளா தாப்பாவின் திருமண செய்தியை அறிந்த அவரது ரசிர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருவது  குறிப்பிடத்தக்கது.