காதலருடன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருகிறேன்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிரபல சர்ச்சை நடிகை 

 

காதலருடன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருகிறேன்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிரபல சர்ச்சை நடிகை 

பிரபல சர்ச்சை நடிகை ராக்கி சாவந்த் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குயேற்க உள்ளதாக அறிவித்துள்ளார். 

சென்னை: பிரபல சர்ச்சை நடிகை ராக்கி சாவந்த் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குயேற்க உள்ளதாக அறிவித்துள்ளார். 

பாலிவுட்டின் கிளாமர் குயின் என்று அழைக்கப்படுபவர் ராக்கி சாவந்த்(40) இவர் தமிழில் ‘முத்திரை’, ‘என் சகியே’ உள்ளிட்ட திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார். அவ்வப்போது எதாவது ஒரு சர்ச்சையை கிளப்பி கொண்டே இருப்பார். 

 இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார். தமிழில் ஒளிபரப்பாவது போல பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியா முழுவதும் பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் ஜூன் 23 தொடங்குவது போல் ஹிந்தியில் பதிமூன்றாவது சீசன் விரைவில் துவங்கவுள்ளது. அதையும் வழக்கம் போல சல்மான் கான் தொகுத்து வழங்கவுள்ளார்.

இந்த நிலையில் தான் அதில் தனது காதலர் தீபக்குடன் கலந்துகொள்ள உள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி  இந்த வாய்ப்பை கொடுத்த, தொகுப்பாளர் சல்மான்கானுக்கு நன்றி தெரிவித்து, தன்னுடைய காதலருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். முன்னதாக ராக்கி சாவந்த் ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசனிலும் பங்குயேற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.