காதலருக்காக ரேஸ் நடிகரிடம் அட்ஜஸ்ட் செய்த உச்ச நடிகை!

 

காதலருக்காக ரேஸ் நடிகரிடம் அட்ஜஸ்ட் செய்த உச்ச நடிகை!

இயக்குநர், தயாரிப்பாளர்களின் முதல் சாய்ஸாக, அதிகபட்ச படங்களை கைவசம் வைத்திருப்பவர் உச்ச நடிகை.

இயக்குநர், தயாரிப்பாளர்களின் முதல் சாய்ஸாக, அதிகபட்ச படங்களை கைவசம் வைத்திருப்பவர் உச்ச நடிகை.

வயது கூட கூட மெருகேரிக் கொண்டே செல்லும் உச்ச நடிகை, தங்கமாக தன்னை தாங்கும் காதலரை சீக்கிரம் மணந்துக் கொள்வார், மற்ற நடிகைகளுக்கு வழிவிடுவார் என்று பார்த்தால், அசராமல் ஆண்டுதோறும் அரை டஜன் படங்களை கையில் வைத்துக்கொண்டே சுற்றுகிறார்.

சமீபத்தில் ரேஸ் நடிகரின் படத்தில் நடித்துள்ள ஒப்பந்தமான உச்ச நடிகை, தாராளம் காட்டியிருப்பதாக கூறப்படுகிறது. நோ கிளாமர் ஒன்லி ஸ்கிரிப்ட் என ஸ்ட்ரிக்ட்டாக கண்டிஷன் போட்டு நடித்து வரும் உச்ச நடிகை, கட்டுப்பாடை தளர்த்து ரேஸ் நடிகரின் படத்தில் சற்று தாராளம் காட்டியுள்ளாராம்.

gossip

இதற்கு முக்கிய காரணம், எப்படியாவது தனது காதலரின் இயக்கத்தில் ரேஸ் நடிகர் நடிக்க வேண்டும் என்பது தானாம். பலமுறை இதற்கான முயற்சிகள் எடுத்தும் வீணாகிபோனதாம். ரேஸ் நடிகரிடம் தான் பாட்சா பழிக்கவில்லை என டான்ஸ் நடிகரின் படத்தை பிடித்துவிட்டார் உச்ச நடிகை.

நடிகைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து சோலோவாக மாஸ் காட்டி வரும் உச்ச நடிகை, தற்போது முன்னணி நடிகர்களை ரொமான்ஸ் செய்யும் வாய்ப்பையும் தட்டி பறித்துவிட்டாரே என சக நடிகைகள் கடும் கோவத்தில் உள்ளனராம்.

இயக்குநர்களின் முதல் சாய்ஸாக இருந்தும், தங்களுக்கு கிடைக்கு சிறிய வாய்ப்புகளையும் அசால்ட்டாக பறித்துக் கொண்டாரே என்ன தான் செய்வது என மற்ற நடிகைகள் புலம்பிக் கொண்டிருக்கிறார்களாம்.