காட்டுக்குள் புகுந்து கேரளாவுக்கு வந்தால் 28 நாள் சிறை! – போலீஸ் எச்சரிக்கை

 

காட்டுக்குள் புகுந்து கேரளாவுக்கு வந்தால் 28 நாள் சிறை! – போலீஸ் எச்சரிக்கை

தமிழகம் மற்றும் கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தற்போது தாக்கம் குறையத் தொடங்கியுள்ள நிலையில், பாதிப்பு முற்றிலுமாக நீங்கவில்லை.

ஊரடங்கு காரணமாக காடுகள் வழியாக கேரளாவுக்குள் நுழையும் மக்களைக் கட்டுப்படுத்த 28 நாள் சிறை தண்டனையை அம்மாநில போலீசார் அறிவித்துள்ளனர்.
தமிழகம் மற்றும் கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தற்போது தாக்கம் குறையத் தொடங்கியுள்ள நிலையில், பாதிப்பு முற்றிலுமாக நீங்கவில்லை.

கேரளாவில் கொரோனா தொற்று பரவலாக இருந்த நிலையில் அம்மாநிலத்துக்கான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் கூட தொடக்கத்தில் தடை செய்யப்பட்டது, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனையுடன் போக்குவரத்துக்கு அனுமதி அளித்தது தமிழக அரசு.

kerala-tamilnadu-border

இந்த நிலையில், தமிழகத்தில் சிக்கிய கேரள மக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல முடியாமல் திணறி வருகின்றனர். அதேபோல், வணிகம் உள்ளிட்ட தேவைகளுக்காக தமிழர்களும் கேரளாவுக்கு செல்ல வேண்டியது கட்டாயமாக உள்ளது. சாலைகளில் சென்றால் போலீசார் அனுமதி அளிக்க மறுக்கின்றனர் என்பதால், எல்லைப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் நடந்தே கேரள மாநிலத்துக்குள் நுழையும் நிலை உள்ளது. குறிப்பாக தேனி, கோவை மாவட்டங்களில் வனப்பகுதி வழியாக கேரளாவுக்குள் ஊடுருவல் மேற்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதைத் தடுக்கும் வகையில் போலீசார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “தமிழ்நாட்டிலிருந்து கேரள மாநிலத்திற்குள் காட்டு வழியாக வர அனுமதி கிடையாது. மீறி வருபவர்கள் 28 நாட்கள் சிறையில் வைக்கப்படுவார்கள். காட்டு வழியாக வருபவர்கள் குறித்து பொது மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.