காட்டுக்குள் சென்ற கபாலிக்கு காயம் 

 

காட்டுக்குள் சென்ற கபாலிக்கு காயம் 

Man VS Wild என்ற நிகழ்ச்சிக்காக பெங்களூர் காட்டுக்கு சென்ற ரஜினிகாந்துக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. 

Man VS Wild என்ற நிகழ்ச்சிக்காக பெங்களூர் காட்டுக்கு சென்ற ரஜினிகாந்துக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. 

rajini thuglak speech

எப்போதும் ரஜினிகாந்த் அவர்கள் ஒய்வு எடுப்பதற்கு இமயமலை செல்வது வழக்கம். இம்முறை சற்று மாறுதலாக இருக்கட்டும் என காட்டுக்குள் சென்றிருக்கிறார். 
பெரியார் குறித்து சர்ச்சையில் ஆளாளுக்கு ரஜினியை காய்ச்ச ஆரம்பித்து விட்டார்கள். எனவே மனிதர்களை விட்டு சற்று தொலைவு செல்ல முடிவு எடுத்துவிட்டார் போலும்.

 

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் Man VS Wild நிகழ்ச்சி உலகம் முழுதும் பிரபலம். அதில் Bear grylls காட்டுக்குள் நாம் சிக்கிவிட்டால் எவ்வாறு உயிர்பிழைப்பது எப்படி என்று அனைவர்க்கும் கற்றுகுடுப்பார். நாங்க ஏண்டா காட்டுக்குள்ள போகபோறோம்? என்ற உங்க மைண்ட் வாய்ஸ் கேட்குது. 

modi in man vs wild

இந்த நிகழ்ச்சியின் இந்திய பதிப்பில் முதன் முதலாக பிரதமர் மோடி கலந்து கொண்டார். அந்த எபிசொட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி டிஆர்பி எகிறியது. இருவரும் எந்த மொழியில் பேசிக்கொண்டனர் என நெட்டிஸின்கள் கலாய்த்தனர். 
இது குறித்து பியர்க்ரில்ஸ் பேசிய போது “இந்திய நாட்டின் பிரதமர் அவர்களை இந்த பயணத்தில் என்னுடன் அழைத்துச் செல்வதை நினைத்து பெருமை அடைகிறேன். இந்திய காடுகளின் அழகு என்னை எப்போதும் ஈர்க்கும். காடுகள் மட்டுமல்ல இந்திய மக்களும் எனக்கு அதிகம் பிடிக்கும். இந்தியாவில் இன்னும் நிறைய நிகழ்ச்சிகள் நடத்த விரும்புகிறேன்” என்று கூறினார். 

bear grylls

இப்பொது இந்த நிகழ்ச்சியில் இரண்டாவதாக கலந்துகொள்வதற்காக ரஜினிகாந்த் பெங்களூரு பண்டிபூர் வனப்பகுதிக்கு சென்றுள்ளதாக காலைமுதல் செய்திகள் வந்து சோசியல் மீடியாவிலும் ட்ரெண்ட் ஆகின. 

இந்நிலையில் காட்டிற்குள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது ரஜினியின் கணுக்காலில் சிறு காயம் மற்றும் தோளில் சில காயங்கள் ஏற்பட்டுள்ளது என தகவல் வந்துள்ளது.