காஞ்சிபுரம் அத்தி வரதரை தரிசிக்க ஆதார் கட்டாயம்  | கல்லா கட்டும் தனியார் நிறுவனங்கள்

 

காஞ்சிபுரம் அத்தி வரதரை தரிசிக்க ஆதார் கட்டாயம்  | கல்லா கட்டும் தனியார் நிறுவனங்கள்

காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், அத்தி வரதர் வைபவம், ஜூலை 1ல் துவங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்நிகழ்வு நடைபெற இருப்பதால், பக்தர்களின் வருகையின் எண்ணிக்கை கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், அத்தி வரதர் வைபவம், ஜூலை 1ல் துவங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்நிகழ்வு நடைபெற இருப்பதால், பக்தர்களின் வருகையின் எண்ணிக்கை கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாமானிய பக்தர்கள் மட்டுமல்லாமல், முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் என, பலரும் வர உள்ளனர்.

kanchipuram temple

இதையொட்டி, கோவில் நிர்வாகம் பக்தர்கள் எளிதில் அத்திவரதரை தரிசிப்பதற்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காகவும் சில நடைமுறைகளைப் பின்பற்றி அறிவித்துள்ளது. 
காஞ்சி அத்தி வரதரை தரிசிக்கும் உள்ளூர் பக்தர்கள், மாலை, 5:00 முதல், இரவு, 8:00 மணி வரை, எப்போது வேண்டுமானாலும் கோவிலுக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு, ஒரு முறை நடைபெறும் அத்தி வரதர் வைபவம் ஜூலை 1ம் தேதி முதல் நடைபெற உள்ளது. கோடிக்கணக்கான பக்தர்கள் அத்தி வரதரை தரிசிக்க வருவார்கள் என்பதால், பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்கள், ஆதார் அட்டையை காண்பித்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்க படுவார்கள். மொத்தம் 48 நாள்களில், ஒருமுறை மட்டுமே ஆதார் அட்டையைப் பயன்படுத்த முடியும். பொது வழியில், காலை, 6:00 மணியிலிருந்து, மாலை, 5:00 மணிக்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் தரிசிக்கலாம். இரவு 8:00 மணிக்கு எவ்வளவு பக்தர்கள் கூட்டம் வந்தாலும், அவர்கள் தரிசனம் முடித்த பின், வெளியே அனுப்புவார்கள் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
ஜூலை, 4 முதல், 10 வரை கோடை உற்சவமும்,
ஜூலை, 11ல் ஆனி கருடசேவையும்,
ஜூலை, 25 முதல், ஆக.,4 வரை ஆடி பூரம் விழாவும்,
ஆகஸ்ட், 13, 14 ஆளவந்தார் சாற்றுமுறை உற்சவமும்,
ஆகஸ்ட், 15ல் ஆடி கருடசேவை உற்சவமும் நடைபெறுவதால் அன்றைய தினங்களில், உள்ளூர் பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது.

kanchipuram temple

வெளியூர் பக்தர்களுக்கு, மாலை, 5:00 மணிக்கு மேல், அத்தி வரதர் தரிசனம் கிடையாது என்ற தகவல், ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்ட பக்தர்களுக்கு முழுமையாக தெரியாது என்பதால், மாலையில் தரிசனம் செய்ய நுாற்றுக்கணக்கானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வெளியூர் பக்தர்கள் மாலையில் வந்தால், அவர்களுக்கு போதிய இட வசதியை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்து வருகிறது.  வசதி உள்ளவர்கள், விடுதியில் தங்குவர்.

aadhar card

ஆனால், வசதியில்லாத குடும்பத்தினர் தங்குவதற்கு, அன்னை அஞ்சுகம், திருமண மண்டபங்களை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கை பக்தர்களிடையே எழுந்துள்ளது. காஞ்சிபுரத்தில், அத்தி வரதரை தரிசிக்க, சிறப்பு தரிசனம் என்ற பெயரில், தனியார் நிறுவனங்கள் பேக்கேஜ் பற்றிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆறு பேருக்கு, ரூ. 9999 கட்டணத்தில், தனி விடுதி, ஆறு பேருக்கும் உணவு, கோவிலுக்குச் சென்று வர வாகன வசதி, தரிசன டிக்கெட் ஆகியவை அடங்கும் என்று காஞ்சிபுரத்தைச் சுற்றிலும் நிறைய தனியார் நிறுவனங்கள் அறிவிப்புகளை வெளியிட்டு கல்லா கட்டி வருகின்றன.  இந்நிலையில், தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித், ஜூலை 20ம் தேதி அத்திவரதரை தரிசிக்க வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.