காங்., தேர்தல் அறிக்கையால் சோனியா மனவருத்தம்; காரணம் என்ன தெரியுமா?

 

காங்., தேர்தல் அறிக்கையால் சோனியா மனவருத்தம்; காரணம் என்ன தெரியுமா?

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ராகுல் நேற்று வெளியிட்டார். முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான 19 பேர் கொண்ட சிறப்புக்குழு இந்தத் தேர்தல் அறிக்கையைத் தயாரித்துள்ளது

புதுதில்லி: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள அக்கட்சியின் தலைவர் ராகுலின் புகைப்படம் சிறிய அளவில் இருந்ததால் சோனியாகாந்தி மனவருத்தத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. இதற்கான வேட்பாளர்களை அறிவித்தும், தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டும் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ராகுல் நேற்று வெளியிட்டார். முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான 19 பேர் கொண்ட சிறப்புக்குழு இந்தத் தேர்தல் அறிக்கையைத் தயாரித்துள்ளது.

congress manifesto

தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கட்சியின் மூத்த தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

rahul gandhi

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். அதற்கு மாற்றாக மாநில அளவில் தேர்வு நடத்தப்படும். நியாய்” (NYAY) எனப்படும் குறைந்தபட்ச வருவாய் திட்டம் மூலம் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும். பாதுகாப்பு படைகளுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் (AFSPA) சட்டப்பிரிவு மாற்றியமைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள அக்கட்சியின் தலைவர் ராகுலின் புகைப்படமும், கட்சியின் சின்னமும் சிறிய அளவில் இருந்ததால் சோனியாகாந்தி மனவருத்தத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின்  (AICC) ஆராய்ச்சி குழு தலைவர் ராஜீவ் கவுடாவிடம் அவர் வாதிட்டதாகவும் தெரிகிறது. இந்த மன வருத்தத்தால் தான் அவர் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்க மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

congress manifesto

மகாத்மா காந்தி, ராகுல்காந்தி, கட்சியின் சின்னம் உள்ளிட்டவைகளுக்கு அட்டைப் பக்கத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது சோனியாவின் எண்ணம். ஆனால், கடல் போன்று மக்களை காட்டி இது மக்களுக்கான தேர்தல் அறிக்கையாக காட்ட வேண்டும் என்பது ரன்தீப் சுர்ஜிவாலா, கவுடா உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்களது விருப்பம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் வாசிங்க

வசமாக சிக்கிய தமிழச்சி தங்கபாண்டியன்… அடுத்தடுத்து மாட்டும் திமுக வேட்பாளர்கள்..!