காங்கிரஸ்தான் ஆட்சியை பிடிக்கும்: சச்சின் பைலட் நம்பிக்கை

 

காங்கிரஸ்தான் ஆட்சியை பிடிக்கும்: சச்சின் பைலட்  நம்பிக்கை

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியை பிடிக்கும் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கூறியுள்ளார்.

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியை பிடிக்கும் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கூறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. ராம்கர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் உயிரழந்துவிட்டதால் அங்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 51,687 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாஜக சார்பில் 199 தொகுதிகளிலும், காங்கிரஸ் சார்பில் 194 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

காலை முதலே பொதுமக்கள் தங்களது வாக்கினை ஆர்வமாக செலுத்தி வருகின்றனர். முதல்வர் வசுந்தரா ராஜே, ஜல்ராபதான் தொகுதி ஜலாவரில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார். மத்திய அமைச்சர் ரத்தோர், ஜெய்ப்பூரின் வைஷாலி நகர் வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.  

அதேபோல் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் ஜெய்ப்பூரில் தனது வாக்கினை பதிவு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ராஜஸ்தானில் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் என்றார்.