காங்கிரசுக்கு இளரத்தம்தான் தேவை… இந்தா பத்த வைச்சுடார்ல அமரீந்தர் சிங்..

 

காங்கிரசுக்கு இளரத்தம்தான் தேவை… இந்தா பத்த வைச்சுடார்ல அமரீந்தர் சிங்..

காங்கிரசின் அடுத்த தலைவராக மக்களை கவர்ந்திழுக்கும் இளம் தலைவர்தான் வர வேண்டும் என பஞ்சாப் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அமரீந்தர் சிங் புதிய குண்டை போட்டுள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த படுதோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். ஆனால் அதனை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் ராகுல் காந்தி தனது முடிவில் உறுதியாக இருந்தார். அண்மையில் தனது தலைவர் பதவியை முறைப்படி ராஜினாமா செய்தார்.

ராகுல் காந்தி

ஆனாலும், இன்னும் காங்கிரசில் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி இன்னும் தொடங்கவில்லை என தெரிகிறது. இதற்கிடையே காங்கிரசின் மல்லிகார்ஜூன கார்கே, சுஷில் குமார் ஷிண்டே, முகுல் வாஸ்னிக் போன்ற வயதான தலைவர்களில் ஒருவரே அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளிவந்தது. இது குறித்து அவர்களும் உண்டு என்றும் சொல்லவில்லை, இல்லை என்றும் சொல்லவில்லை. ஆக அவர்களும் தலைவர் கனவில் மிதக்க தொடங்கி விட்டதாக தெரிகிறது.

மல்லிகார்ஜுன கார்கே

இந்நிலையில், பஞ்சாப் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அமரீந்தர் சிங், ராகுல் காந்திக்கு மாற்றாக, காங்கிரஸ் கட்சியின் தலைவராக மக்களை கவரும் இளம் தலைவர் ஒருவரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என அந்த கட்சியின் முடிவு எடுக்கும் அமைப்பான செயல் கமிட்டியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அமரீந்தர் சிங்கின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சிக்குள் ஆதரவு பெருகியுள்ளது. இதனால் மூத்த தலைவர்கள் அப்செட் ஆகியுள்ளதாக தகவல்.