காக்கி யூனிஃபார்மோடு,பார் பெண்களோடு …குத்தாட்டம் போட்ட காவல்துறை….வைரலாகும் வீடியோ  

 

காக்கி யூனிஃபார்மோடு,பார் பெண்களோடு …குத்தாட்டம் போட்ட காவல்துறை….வைரலாகும் வீடியோ  

ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்  பார் பெண்களுடன்  நடனமாடி  அவர்கள் மீது ரூபாய்நோட்டுகளை பொழிவதுபோல  காட்டப்படும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வந்ததை அடுத்து அந்த துணை ஆய்வாளர்  இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஃபதேபூர் (உத்தரபிரதேசம்)பகுதியில் ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்  பார் பெண்களுடன்  நடனமாடி  அவர்கள் மீது ரூபாய்நோட்டுகளை பொழிவதுபோல  காட்டப்படும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வந்ததை அடுத்து அந்த துணை ஆய்வாளர்  இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

utter police

ஹுசைங்கஞ்ச் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திர பால் சனிக்கிழமை இரவு அவரது போலீஸ் சீருடையில் பார் பெண்களுடன்  நடனமாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அவர் அந்த பெண்கள்  மீது ரூபாய் நோட்டுக்குகளை அள்ளி வீசுவதும்  அந்த வீடியோவில் காணப்பட்டது.

 

காவல்துறை அதிகாரியின் தவறான நடத்தையை  கருத்தில் கொண்டு,அவர் இடைநீக்கம்  செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.”வீடியோ கிளிப்பில் சில கான்ஸ்டபிள்களையும் நாங்கள்  காண்கிறோம், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.