கவுன்சிலராகி மூன்றே நாள்.. மகன், மாமியாருடன் கடத்தல்.. கண்டு பிடித்துத் தருமாறு கணவன் புகார் !

 

கவுன்சிலராகி மூன்றே நாள்.. மகன், மாமியாருடன் கடத்தல்.. கண்டு பிடித்துத் தருமாறு கணவன் புகார் !

பூங்கொடி நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில்  திருத்தணி ஒன்றியம் 2-வது வார்டில் அதிமுக சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

திருத்தணி அருகே உள்ள மத்தூர் கிராமத்தில் வசிக்கும் கோட்டி என்பவரின் மனைவி பூங்கொடி. கோட்டி திருப்பூரில் ஆடை நிறுவனம் நடத்தி வருகிறார். இவர்களுக்கு 4 மாத குழந்தை ஒன்று உள்ளது. கோட்டியின் தாயாரும் இவர்களுடனே வசித்து வருகிறார். பூங்கொடி நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில்  திருத்தணி ஒன்றியம் 2-வது வார்டில் அதிமுக சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். பூங்கொடி கடந்த 6 ஆம் தேதி கவுன்சிலராக பதவி ஏற்றுள்ளார். 

ttn

இந்நிலையில், பூங்கொடி, பூங்கொடியின் மகன் மற்றும் மாமியார் கடத்தப்பட்டுள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்த கோட்டி கடந்த 10 ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்து 4 நாட்கள் ஆகியும் கடத்தப்பட்ட யாரும் இன்னும் மீட்க படாததால் கோட்டி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், தன் தாய், மனைவி மற்றும் மகன் ஆகியோர் கடத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களை மீட்டுத் தர வேண்டும் என்றும் அப்பகுதியில் வசிக்கும் ஜோதி நாயுடு என்பவர் தான் இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த மனு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது.