கவுதம் காம்பீர் போட்டியிடும் தொகுதி இதுதான்: பாஜக அறிவிப்பு!

 

கவுதம் காம்பீர் போட்டியிடும் தொகுதி இதுதான்: பாஜக அறிவிப்பு!

கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார்

புதுடெல்லி:  மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில்  கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார்

இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர்

gautam

 

இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக நீண்ட காலம் விளையாடினார். தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கும் வீரேந்திர சேவாக் மற்றும் கெளதம் காம்பீர் ஜோடிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். 

பாஜகவில் இணைந்த கவுதம்

Gautam

 

கடந்த ஆண்டு டெல்லி மற்றும் ஐதராபாத் இடையே நடந்த ராஞ்சி தொடர் போட்டியோடு அனைத்து தரப்பு கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்றார் கெளதம் காம்பீர். இதையடுத்து காம்பீர் கடந்த மாதம் 22 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் நெடுஞ்சாலை, போக்குவரத்து மற்று கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்காரி முன்னிலையில் கவுதம் பாஜகவில் இணைந்தார்.இதைத்தொடர்ந்து அவருக்கு புது டெல்லி நாடாளுமன்றத் தொகுதியை பாஜக ஒதுக்கவுள்ளதாகவும், அங்கு கவுதம் வேட்பாளராகப் போட்டியிடுவார் என்றும் கூறப்பட்டது. 

கிழக்கு டெல்லியில் போட்டி

Gautam

 

அந்த வகையில் கிழக்கு டெல்லி மற்றும் புது டெல்லி ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. இதில் கிழக்கு டெல்லியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீரும், புது டெல்லியில் ரஃபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி பொய் பரப்பி வருவதாக வழக்கு தொடர்ந்த  மினாக்ஷி லேகியும் போட்டியிடுகின்றனர்.  காங்கிரஸ் தரப்பில் புது டெல்லி தொகுதியில் முன்னாள் அமைச்சர் அஜய் மாக்கென்னும்,  வட கிழக்கு டெல்லியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித்தும் போட்டியிடுகின்றனர். சாந்தினி சவுக் தொகுதி ஜெ.பி.அகர்வாலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் ஒவ்வொரு கட்டங்களாக  நடைபெற்று வரும் நிலையில்  டெல்லியில் பாஜக, காங்கிரஸ் எனக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது மக்களவைத் தேர்தலுக்கான அரசியல் களத்தைச்  சூடு பிடிக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: கடைசி ஓவரில் காட்டடி அடித்ததன் மூலம் புதிய சாதனை படைத்தார் தல தோனி !!