கவினை பளார் என்று அறைந்த நண்பர்: அதிர்ச்சியில் உறைந்த ஹவுஸ்மேட்ஸ் !

 

கவினை பளார் என்று அறைந்த நண்பர்: அதிர்ச்சியில் உறைந்த ஹவுஸ்மேட்ஸ் !

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

kavin

பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி 82 வது நாளை அடைந்துள்ளது. பிக் வீட்டில் இந்த வாரம்   ஃப்ரீஸ் டாஸ்க் நடந்து வருகிறது. முகினின்  அம்மா நிர்மலா மற்றும் தங்கை ஜனனி பிக் பாஸ் வீட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து தொடர்ந்து  லாஸ்லியாவின்  குடும்பத்தினர் வந்திருந்தனர். அதேபோல் நேற்று வனிதாவின் மகள்கள், தர்ஷனின் குடும்பம், சேரனின் அம்மா, தங்கை, மகள் ஆகியோர் வந்திருந்தனர்.

 

இந்நிலையில் பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல்   புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ள கவினின் நண்பரும் நடிகருமான  பிரதீப் ஆண்டனி கவினிடம், எனக்கு கடமை பாக்கி இருக்கு. நான் கெளம்ப வேண்டிய நேரம் வந்துடுச்சினு நினைக்குறேன். நீ இவ்வளவு கேவலமா ஆடுன கேமுக்கு, நீ மட்டமா ஒரு விஷயம் பண்ணதுக்கு, உன்ன நம்புனவங்கள நீ கைவிட்டதுக்கு, இங்க இருக்குற எல்லாரையும் ஹர்ட் பண்ணதுக்கு இப்போ நான் உன்ன செய்யலாம்ன்னு இருக்கேன். டைட்டில் ஜெயிச்சிட்டு நீ பெரிய ஆளா  ஆகிட்டான்னா  என்ன ஸ்டேஜ்ல கூப்பிட்டு திருப்பி அடிச்சிக்கோ என்று சொல்லி பளார் என்று  கவினின் கன்னத்தில் அறைகிறார். இதைக் கண்டு லாஸ்லியா உள்ளிட்ட மொத்த பிக் பாஸ் வீடும் அதிர்ச்சியில் உறைகிறது.