கவலைக்கான உண்மையான மருந்து

 

கவலைக்கான உண்மையான மருந்து

அந்த நகரின் புகழ் பெற்ற மருத்துவரான இக்பாலிடம் அவசர அவசரமாக நோயாளி ஒருவர் வந்தார். 
தனக்கு அதிக சோர்வாக இருக்கிறது. தலைச்சுற்றுகிறது. இரவில் நீண்ட நேரமாகியும் தூக்கமே வருவதில்லை என்று தனது உடம்பைப் பற்றி பலவிதமான அறிகுறிகளை அடுக்கிக் கொண்டே போனார்.

கவலைக்கான உண்மையான மருந்து

அந்த நகரின் புகழ் பெற்ற மருத்துவரான இக்பாலிடம் அவசர அவசரமாக நோயாளி ஒருவர் வந்தார். 
தனக்கு அதிக சோர்வாக இருக்கிறது. தலைச்சுற்றுகிறது. இரவில் நீண்ட நேரமாகியும் தூக்கமே வருவதில்லை என்று தனது உடம்பைப் பற்றி பலவிதமான அறிகுறிகளை அடுக்கிக் கொண்டே போனார். மருத்துவரான இக்பாலும் வந்திருந்தவரை பொறுமையாக பரிசோதித்து விட்டு, ”எந்த நோயும் உங்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் நீங்கள் அளவுக்கு அதிகமாகவே கவலைப்படுகிறீர்கள். உங்களுக்கு மனச்சோர்வு அதிகமாகியிருக்கிறது.  அதற்கும் மருந்து ஒன்று இருக்கிறது. 

இன்று மாலை நமது ஊரில் நடக்கும் புகழ் மிக்க சர்க்கஸ் நிகழ்ச்சியை கண்டு களியுங்கள். அந்நிகழ்ச்சியில் கிரிபால்டி என்ற கோமாளி பலவித வித்தைகளைக் காட்டி வயிறு குலுங்க சிரிக்க வைப்பார். கவலைக்கு மருந்து சிரிப்பு ஒன்றே. சிரித்தால் கவலை பறந்து விடும்” என்றார்.
அட போங்க டாக்டர். அங்கே கோமாளி வேஷமிடும் கிரிபால்டி நான் தான்” என்றார் நோயாளி.
கவலையில்லாத மனிதர்கள் என்று யாருமே இந்த உலகில் கிடையாது. எனக்கு கவலைகளே இல்லை என்று யாராவது சொன்னால் அவர்களை சந்தேகப்படுங்கள். ஆனால், நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று சொன்னால் அவர்கள் உண்மையைச் சொல்கிறார்கள்.

ஆம், கவலைக்கும் சந்தோஷத்துக்குமான வித்தியாசத்தை நாம் உணர்வதே இல்லை. சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் நாம் அதே நேரம் கவலைப்படுவதால் பயனில்லை. இறைவனிடம் நம் குறைகளை சொல்லி அமைதி தேடுவதே நல்லது.