கவனக்குறைவால் வெடித்துச் சிதறிய டிவி… ப்ரிட்ஜ்!  படிச்சுட்டு இனி உஷாரா இருங்க!

கவனக்குறைவால் வெடித்துச் சிதறிய டிவி… ப்ரிட்ஜ்!  படிச்சுட்டு இனி உஷாரா இருங்க!

தமிழகத்தில் மழைக் காலங்களில் ஒவ்வொரு வருடமும் துவங்கும் பொழுதும் மின்சாதனங்களால் ஏற்படும் விபத்து அதிகரித்து வருகிறது. இப்படி வீட்டில் பயன்படுத்தி வரும் மின்சாதனங்களால் தொடர் விபத்துக்கள் நடைப்பெற்று வந்தாலும், இந்த விபத்துகளைப் பற்றியும், மின்சாதனங்களைப் பாதுகாப்பாக பயன்படுத்துவது  பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இல்லை.

பெரும்பாலான வீட்டின் உரிமையாளர்கள், வாடகைக்கு வீடு விடும் போது, மின் ஒயர்களை சரி செய்வதே கிடையாது. அப்படியே மின் ஒயர்கள் சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தாலும், இருப்பதை வைத்து சமாளித்துக் கொள்ளுங்கள் என்று கைவிரித்து விடுகிறார்கள். இது பற்றியெல்லாம் வாடகை நிர்ணய சட்டமோ, காவல் துறையோ கண்டுக் கொள்வதில்லை. அப்படி சமீபத்தில், அதிகளவிலான மின் அழுத்தத்தினால் ஏஸி வெடித்து, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பத்திரிக்கையாளர் சென்னை பல்லாவரத்தில் குடும்பத்தோடு இறந்து போனார். 

home

இந்நிலையில், ஆற்காடு சாய்பாபா நகர் ராஜகோபால் தெருவைச் சேர்ந்த தனசேகர், இன்று அதிகாலை 3.45 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது, அவரது வீட்டுக்குள் இருந்து பயங்கரமான வெடி சப்தத்துடன் வீட்டிற்குள் இருந்து டிவி வெடித்து சிதறியது. அதிகாலை நேரத்தில், திடீரென எழுந்த வெடி சத்தத்தினல் அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள், என்னாச்சோ என்று பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்து பார்த்திருக்கிறார்கள்.  அவர்கள் பார்த்த போது, தனசேகரின் வீட்டுச் சுவர் பலமாக விரிசலடைந்து, வீட்டின் கதவு, ஜன்னல்கள் எல்லாமே உடைந்து தூள் தூளாகச் சிதறி கிடந்துள்ளது. வீட்டுக்குள் இருந்த ஷோபா, ஸ்கீரின், நாற்காலிகள் போன்ற பொருட்கள் எல்லாமே தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தன.

home1

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தடவியல் நிபுணர்களுடன் வெடி விபத்திற்கான காரணத்தை அறிய சோதனையில் ஈடுபட்டனர். தனசேகர் வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாகவே விபத்து ஏற்பட்டு மின்சாதனப் பொருட்கள் வெடித்துச் சிதறியது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கேஸ் சிலிண்டரின் அருகிலேயே ஃப்ரிட்ஜை வைத்திருந்துள்ளனர். கேஸ் கசிவு ஏற்பட்டது யாருக்கும் தெரியவில்லை’ என்று போலீசார் தெரிவித்தனர்.