கழிவறையை விட ஸ்மார்ட்போன்களில் கிருமிகள் அதிகம் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

 

கழிவறையை விட ஸ்மார்ட்போன்களில் கிருமிகள் அதிகம் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கழிவறைகளை விட நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் மிக அதிகளவு கிருமிகள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஃபீனிக்ஸ்: கழிவறைகளை விட நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் மிக அதிகளவு கிருமிகள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கழிவறைகளை விட நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் மிக அதிகளவு கிருமிகள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அரிசோனா பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர் சார்லஸ் ஜெர்பா என்பவர் ஸ்மார்ட்போன்களின் மூலம் பரவும் நோய்கள் பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். அதன் முடிவில் தான் இத்தகைய அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. இந்த ஆய்வின்போது 25 ஸ்மார்ட்போன்கள் சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. டெலஸ்கோப் கருவி கொண்டு ஆய்வு செய்து பார்க்கையில் அதில் பெரும்பாலான சாதனங்களில் ஒரு சதுர அடிக்கு 25,127 கிருமிகள் இருப்பது தெரியவந்தது. பொதுவாக நம் வீட்டு கழிவறைகளில் ஒரு சதுர அடிக்கு 49 கிருமிகளே காணப்படுகின்றன.

ttn

எனவே நம்முடைய ஸ்மார்ட்போன்களை சுத்தமாக வைத்திருப்பது மிக மிக அவசியமான செயலாகும். முடிந்தவரை மற்றவர்களின் ஸ்மார்ட்போன்களை நாம் உபயோகிக்காமலும், நம்முடைய ஸ்மார்ட்போனை மற்றவரிடம் கொடுக்காமலும் இருப்பது நல்லது. ஸ்மார்ட்போன் மூலம் ஒருவரது கைகள், முகம் மற்றும் வாய் அருகே அவை அதிக நேரம் பயன்படுத்தப்படுகிறது. எனவே கிருமிகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. கைகளை அடிக்கடி சுத்தமாக கழுவுதல், ஆல்கஹால் வைப் கொண்டு ஸ்மார்ட்போனை துடைத்தல் ஆகியவை ஸ்மார்ட்போனை தூய்மையாக பயன்படுத்தும் வழிகளாகும். குறிப்பாக சாப்பிட அமரும் முன் ஸ்மார்ட்போன்களை வைத்து விட்டு கைகளை நன்கு கழுவ வேண்டும். மேலும் உணவு அருந்தும்போது ஸ்மார்ட்போனை தொடாமலே இருப்பது சிறந்தது.