கழிவறையில் தயாரிக்கப்படும் அங்கன்வாடி உணவு: ‘தவறு இல்லை’ என்று அடித்து பேசும் மத்திய அமைச்சர்!

 

கழிவறையில் தயாரிக்கப்படும் அங்கன்வாடி உணவு: ‘தவறு இல்லை’  என்று அடித்து பேசும் மத்திய அமைச்சர்!

அங்கன்வாடி குழந்தைகளுக்குக் கழிவறையில் சமைப்பது தவறு இல்லை என மத்திய பிரதேச அமைச்சர் இமார்த்தி தேவி தெரிவித்துள்ளார்

சிவபுரி : அங்கன்வாடி குழந்தைகளுக்குக் கழிவறையில் சமைப்பது தவறு இல்லை என மத்திய பிரதேச அமைச்சர் இமார்த்தி தேவி தெரிவித்துள்ளார்.

midday meal

மத்திய பிரதேச மாநிலம், சிவபுரி மாவட்டம், கரோராவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்குச் சமைக்கப்படும் உணவுகள் கழிவறையில் வைத்துத் தயாரிக்கப்படுவதாகப் புகார் எழுந்தது. மேலும் உணவு தயாரிக்கப்படும் பொருட்கள் அனைத்தும் கழிவறையில் வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. 

madyapradesh

இதுகுறித்து மத்திய பிரதேச அமைச்சர் இமார்த்தி தேவி கூறும் போது, கழிவறையில் உணவு சமைப்பது தவறு ஏதும் இல்லை. நம் வீட்டில் கூட தான் குளியலறையில் கழிவறையும் இருக்கும். அதற்காக உறவினர்கள் சாப்பிடாமல் போய்  விடுவார்கள். குளியலறையில் நம் வீட்டில் பாத்திரங்கள்  வைப்பதில்லையா? வேண்டாத பாத்திரங்களை வைக்கிறோம் அல்லவா? அங்கன்வாடியில் கழிவறையும், சமைக்கும் இடமும் குறிப்பிட்ட தூரம் தள்ளித் தான் இருக்கிறது’ என்றார். 

madhya pradesh

இதுகுறித்து பேசிய அம்மாவட்ட அதிகாரி, இதில்  சம்பந்தப்பட்ட அங்கன்வாடி மேற்பார்வையாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் முறையான சமையலறையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார்.  அமைச்சர் இமார்த்தி தேவியின் கருத்துக்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.