கள்ள ஒட்டு போட ஐடியா கொடுத்த அன்புமணி; தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்!

 

கள்ள ஒட்டு போட ஐடியா கொடுத்த அன்புமணி; தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்!

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலில் களம் காணும் தங்களது கட்சியினருக்கும், கூட்டணி கட்சியை சேர்ந்த வேட்பாளர்களுக்கும் ஆதரவாக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்

சென்னை: வாக்குச்சாவடியில் நாம் மட்டுமே இருப்போம் என சர்ச்சைக்குரிய வகையில் பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அவர் மீது திமுக புகார் அளித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. தமிழக்கத்தில் இதனுடன் சேர்த்து 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலில் களம் காணும் தங்களது கட்சியினருக்கும், கூட்டணி கட்சியை சேர்ந்த வேட்பாளர்களுக்கும் ஆதரவாக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

anbumani ramadoss

இவ்விரு தேர்தல்களிலும் அதிமுக-வுடன் பாமக கூட்டணி வைத்துள்ளது. திராவிட கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என கூறி, கழகத்தின் கதை என அதிமுக-வை விமர்சித்து புத்தகம் எழுதிய ராமதாஸ், அதிமுக-வுடன் கூட்டணி வைத்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இந்நிலையில், திருப்போரூரில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்த அன்புமணி, தேர்தல் அன்று என்ன நடக்கும்? பூத்தில் என்ன நடக்கும்? பூத்தில் நாம் தான் இருப்போம். நம்முடைய ஆட்கள் மட்டும் தான் இருப்பார்கள். அப்புறம் என்ன சொல்ல வேண்டுமா வெளியில், என்ன புரிகிறதா? என பேசினார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது.

இதையும் வாசிங்க

தமிழிசை பேரச் சொன்னாலே சுகமா இருக்கும்: நடிகர் கார்த்திக் பகீர் ஸ்டேட்மெண்ட்