கள்ளக்காதலனை குப்பையோடு குப்பையாக வைத்து எரித்து கொன்ற கள்ளக்காதலி: மதுரையில் பரபரப்பு!

 

கள்ளக்காதலனை குப்பையோடு குப்பையாக வைத்து எரித்து கொன்ற கள்ளக்காதலி: மதுரையில் பரபரப்பு!

கணவன் மனைவிக்குள்  ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு மணிகண்ட பிரபு  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை : கள்ளக்காதல் பிரச்னையால் இளைஞர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்ட பிரபு. இவருக்கும் காளீஸ்வரி என்பவருக்கும் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இதையடுத்து கணவன் மனைவிக்குள்  ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு மணிகண்ட பிரபு  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கணவர் இறந்தபின்பு அதே பகுதியை சேர்ந்த வெயில்முத்துவுக்கும் காளீஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனிடையே வெயில்முத்து குடும்பத்தார் காளீஸ்வரியிடமிருந்து தங்கள் மகனை மீட்டுத்தருமாறு போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

murder

இந்நிலையில் காளீஸ்வரி போலீசில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் தன்னுடன் வாழ்ந்துவந்த வெயில்முத்து தன்னோடு சண்டையிட்டு மண்ணெண்ணெய் ஊற்றி  தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை, வெயில்முத்து மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில் காளீஸ்வரி முன்னுக்கு பின் முரணான தகவல் கூறி வந்த நிலையில் அவரிடம் விசாரணையை திவீரப்படுத்தினர். அப்போது வெயில் முத்துவை தான்தான் கொன்றதாக காளீஸ்வரி ஒப்புக்கொண்டார். இதுகுறித்து அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், ‘ வெயில்முத்து சில நாட்களாக என்மீது சந்தேகப்பட்டுக் குடித்துவிட்டு வந்து என்னை அடித்து துன்புறுத்தி வந்தார். கடந்த 17ஆம் தேதி குடிபோதையில் வீட்டிற்கு வந்த அவர் என்னைத் தாக்கினார். கோபத்தில் நான் அவரை கீழே தள்ளிவிட்டேன். அவர் மயக்கநிலைக்குப் போனதால் ஒருவேளை மீண்டும் மயக்கம் தெளிந்து எழுந்தால்  என்னை கொலை செய்து விடுவார் என்று பயந்து அவரது கழுத்தை நெரித்துக் கொன்றேன். பிறகு அவரது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தேன். ஆனால் அவரது  உடல் சரியாக எரியாததால்   வெயில்முத்து உடலை வெளியே இழுத்து வந்து குப்பையில் போட்டு மீண்டும் எரித்தேன்’ என்று தெரிவித்துள்ளார்.

murder

இதையடுத்து வெயிலமுத்துவை கொலை செய்த குற்றத்திற்காக காளீஸ்வரியை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.