களை கட்டிய பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 234 புள்ளிகள் உயர்ந்தது….

 

களை கட்டிய பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 234 புள்ளிகள் உயர்ந்தது….

தொடர்ந்து 2வது நாளாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் 234 புள்ளிகள் உயர்ந்தது.

அமெரிக்க பங்குச் சந்தைகள் நேற்று ஏற்றத்துடன் முடிவடைந்தது. சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தது. ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. மேலும் சில முன்னணி நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது போன்ற சாதகமான அம்சங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது.

தேசிய பங்குச் சந்தை

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், யெஸ் பேங்க், டாடா மோட்டார்ஸ், சன்பார்மா, என்.டி.பி.சி., பவர்கிரிட், டாடா ஸ்டீல் உள்பட 21 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேசமயம் டி.சி.எஸ்., மகிந்திரா அண்டு மகிந்திரா, எச்.சி.எல். டெக்னாலஜிஸ், கோடக்மகிந்திரா பேங்க், டெக்மகிந்திரா, பார்தி ஏர்டெல் உள்பட 9 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,162 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,300 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும், 169 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.149.02 லட்சம் கோடியாக உயர்ந்தது. நேற்று வர்த்தகத்தின் முடிவில் நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.148.07 லட்சம் கோடியாக இருந்தது.

பங்கு வர்த்தகம்

வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 234.33 புள்ளிகள் உயர்ந்து 39,131.04 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 72.70 புள்ளிகள் அதிகரித்து 11,661.05 புள்ளிகளில் முடிவுற்றது.