களைக்கட்டும் ராஜமௌலி மகனின் திருமண கொண்டாட்டம்: ஜெய்ப்பூரில் குவிந்த பாகுபலி பிரபலங்கள்..!

 

களைக்கட்டும் ராஜமௌலி மகனின் திருமண கொண்டாட்டம்: ஜெய்ப்பூரில் குவிந்த பாகுபலி பிரபலங்கள்..!

‘பாகுபலி’ படத்திய இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் மகன் எஸ்.எஸ்.கார்த்திகேயாவின் திருமணம் இம்மாதம் ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது.

ஜெய்ப்பூர்: ‘பாகுபலி’ படத்திய இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் மகன் எஸ்.எஸ்.கார்த்திகேயாவின் திருமணம் இம்மாதம் ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது.

இயக்குநர் ராஜமௌலியின் மகன் கார்த்திகேயாவுக்கும், தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபுவின் சகோதரர் மகள் பூஜாவுக்கும் வரும் ஜன.5ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இவர்களது திருமணம் ஹைதராபாத்தில் உள்ள ராமநாயுடு ஸ்டூடியோஸில் மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

திரையுலகில் சமீப காலமாக பிரபலமாகி வரும் டெஸ்டினேஷன் வெட்டிங் என்ற ட்ரெண்ட் ராஜமௌலியையும் விட்டுவைக்கவில்லை. ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ள இந்த டெஸ்டினேஷன் வெட்டிங் கொண்டாட்டத்திற்காக ‘பாகுபலி’ நடிகர்களான பிரபாஸ், அனுஷ்கா, ராணா உள்ளிட்ட ஏராளமான தெலுங்கு திரை பிரபலங்கள் ஜெய்ப்பூரில் குவிந்துள்ளனர்.

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட இளம் தெலுங்கு ஹீரோக்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என இந்த திருமண கொண்டாட்டம் களைக்கட்டி வருகிறது.