களைகட்டிய ராம்லீலா மைதானம்…..3வது முறையாக டெல்லி முதல்வராக பதவியேற்கும் அரவிந்த் கெஜ்ரிவால்….

 

களைகட்டிய ராம்லீலா மைதானம்…..3வது முறையாக டெல்லி முதல்வராக பதவியேற்கும் அரவிந்த் கெஜ்ரிவால்….

டெல்லியின் முதல்வராக 3வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காலை பதவியேற்கிறார். பதவியேற்பு விழா நடைபெறும் ராம்லீலா மைதானத்தில் அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் கடந்த 8ம் தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் கடந்த 11ம் தேதி வெளியானது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியது. பா.ஜ.க. 8 தொகுதிகளை கைப்பற்றியது. பெரும்பான்மை இடங்களை ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொண்டது.

ஆம் ஆத்மி

ஆத் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து இன்று 3வது முறையாக டெல்லியின் முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கிறார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று காலை பத்து மணி அளவில் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி, டெல்லி பா.ஜ.க. எம்.பி.களுக்கு ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால்

இதுதவிர, டெல்லி வளர்ச்சியில் பங்களிப்பை கொண்ட ஆட்டோடிரைவர்கள், ஆசிரியர்கள் முதல் டாக்டர்கள் என பல்வேறு துறைகளை சேர்ந்த 50 பேருக்கு பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்துள்ளது. அதேசமயம் மற்ற மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 7 ஆண்டுகளில் 3வது முறையாக டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்க உள்ளார்.