களிமண்ணிலே கலைவண்ணம் காண மாணவர்களுக்கு சிறப்பு கண்காட்சி

 

களிமண்ணிலே கலைவண்ணம் காண மாணவர்களுக்கு சிறப்பு கண்காட்சி

குழந்தைகளை கவனிக்கும் வேலை மிச்சம் என்பதால் செல்போனை அவர்கள் கையில் கொடுத்து பழக்குவதைவிடவும், இதுபோல படைப்புத்திறனை ஊக்குவிக்கும் விளையாட்டுகளில் அவர்களை ஈடுபடுத்துவது பெற்றோரின் கடமையாகும்.

“ஏம்ப்பா, போன வருஷமே முக்கி முணகித்தான் பாஸ் பண்ணினே, இந்த வருஷமாச்சும் ஒழுங்கா படிப்பேன்னுப் பாத்தா, 
திரும்பவும் போனை நோண்டிகிட்டு இருந்தா என்ன அர்த்தம்?”
“போன்ல ஏதாச்சும் பரிட்சை வைங்க, ஃபர்ஸ்ட் மார்க் வாங்கி காட்றேன்னு அர்த்தம்” எல்லா வீட்டிலும் இந்த மாதிரி உரையாடல்கள் சர்வ சாதாரணம். வீட்டில் இருக்கும்போது அலுவலகத்தில் இருந்து வரும் முக்கியமான அழைப்புகளைக்கூட தெரிந்தோ தெரியாமலோ கட் பண்ணிவிட்டு கேம் ஆடும் குழந்தைகளை எப்படி அதிலிருந்து மீட்பது? செல்போனே கதி என கிடக்கும் குழந்தைகளின் படிப்பாற்றலையும் படைப்பாற்றலையும் உயிர்ப்பிப்பது எப்படி என கடலூரில் குழந்தைகளுக்கான சிறப்பு கண்காட்சி நடைபெற்றது.

Clay Exhibition

குப்பை என வீசப்படும் பொருட்களையும், கலைநயமிக்க பொருளாக எப்படி மாற்ற முடியும் என்பது குறித்து கண்காட்சியில் செயல்விளக்கம் காட்டப்பட்டது. களிமண்ணால் கலைநயமிக்க பொம்மைகள் செய்வது,  போட்டோ ஃபிரேம் செய்வது என நிபுணர்களால் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. குழந்தைகளை கவனிக்கும் வேலை மிச்சம் என்பதால் செல்போனை அவர்கள் கையில் கொடுத்து பழக்குவதைவிடவும், இதுபோல படைப்புத்திறனை ஊக்குவிக்கும் விளையாட்டுகளில் அவர்களை ஈடுபடுத்துவது பெற்றோரின் கடமையாகும்.