கல், செருப்பு மூலம் போலீசார் மீது தாக்குதல்! – வண்ணாரப்பேட்டை சம்பவம் குறித்து முதல்வர் விளக்கம்!

 

கல், செருப்பு மூலம் போலீசார் மீது தாக்குதல்! – வண்ணாரப்பேட்டை சம்பவம் குறித்து முதல்வர் விளக்கம்!

சட்டப் பேரவையில் இன்று வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். அப்போது அவர், “அனுமதியின்றி போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது. கல், செருப்பு, தண்ணீர் பாட்டல் கொண்டு போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

சென்னை வண்ணாரப்பேட்டையில் அனுமதியின்றி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது போலீசார் மீது கல், செருப்பு, தண்ணீர் பாட்டல் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப் பேரவையில் இன்று வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். அப்போது அவர், “அனுமதியின்றி போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது. கல், செருப்பு, தண்ணீர் பாட்டல் கொண்டு போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாலேயே தடியடி நடத்தப்பட்டது.

vannarpet-violence

இயற்கையான முறையில் முதியவர் ஒருவர் மரணம் அடைந்தார். ஆனால் போராட்டத்தில் இறந்ததாக தவறான தகவல் பரப்பப்பட்டு, இரவு முழுக்க போராட்டம் நடத்தப்பட்டது. கைது செய்து வாகனத்தில் ஏற்றப்பட்ட 80 பேர் ரகளையில் ஈடுபட்டனர். 
போராட்டக்காரர்களை அழைத்துப் பேசியும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். வேண்டுமென்றே சில சக்திகளின் தூண்டுதலின் பேரில் போராட்டம் நடந்து வருகிறது” என்றார்.