கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்த 79 வயது முதியவர்!

 

கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்த 79 வயது முதியவர்!

கல்வி என்பது அனைவரது உரிமை! கல்வியே ஒருவரின் மிகுந்த செல்வம்! இப்போதுள்ள பெண்கள் வரதட்சணை கொடுமைகளிலிருந்து மீள்வதற்கு அவர்கள் கற்ற கல்வியே முதல் காரணம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. திருமணமோ, ஏழ்மையோ ஒருவரின் கல்வி நின்றுபோக காரணிகளாக இருக்க கூடாது. 

என்ன படிச்சிருக்கீங்க? இந்த கேள்வியை எல்லாரும் இப்போ கேட்பதை நாம் பரவலாக பார்க்க முடியும்.நம்ம வீடு பசங்க கூட எங்க மிஸ் சொல்லி தர்றது தான் கரெக்ட் உனக்கு தெரியாது போன்னு சொல்லிடறாங்க! எப்போதும் படிப்புதான் மரியாதையையும் அந்தஸ்தையும் தரும்.

கல்வி என்பது அனைவரது உரிமை! கல்வியே ஒருவரின் மிகுந்த செல்வம்! இப்போதுள்ள பெண்கள் வரதட்சணை கொடுமைகளிலிருந்து மீள்வதற்கு அவர்கள் கற்ற கல்வியே முதல் காரணம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. திருமணமோ, ஏழ்மையோ ஒருவரின் கல்வி நின்றுபோக காரணிகளாக இருக்க கூடாது. 

தவிர,படிப்பதற்கு வயது ஒரு போதும் தடையாக இருப்பதில்லை என்பதற்கு லேட்டஸ்ட் உதாரணம் 79 வயது தானி ராம். இந்த வயதிலும் சளைக்காமல் தனது 10 வகுப்பு தேர்வை எழுதி 60% ஸ்கோர் செய்துள்ளார்! எந்த வயதிலும் ஒருவர் தன் படிப்பை தொடர்ந்து தனது வாழ்க்கை கனவுகளை அடையாளம் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த தாத்தா திகழுகிறார்! 

79 வயதாகும் தானி ராம் ஓய்வு பெற்ற CRPF சுபேதார்-மேஜர். இவருக்கு அசிஸ்டன்ட் கமாண்ட்மென்ட் பதவியுடன் ஓய்வு பெற ஆசை ஆனால் இவர் 10 வகுப்பில் முழுமையாக தேர்ச்சி பெறாத காரணத்தால் இவருக்கு அந்த பதவி அளிக்கப்படவில்லை, இதனால் தானி ராம் மீண்டும் தனது 10ஆம் வகுப்பு தேர்வை எழுதி 60% பெற்றுள்ளார். 

இதுகுறித்து தானி ராம் கூறியதாவது,”நான் எனது 10ஆம் வகுப்பை முடிக்காததால், எனக்கு அசிஸ்டன்ட் கமாண்ட்மென்ட் பதவி வழங்கப்படவில்லை, ஆனால் நான் அதிகம் விரும்பிய அந்த பதவியுடன் ஓய்வு பெறவிரும்பினேன். இதனால் நான் எனது பள்ளி படிப்பை தொடர முடிவு செய்தேன். இன்று நான் எனது ஹை ஸ்கூல் படிப்பை முடித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் எனது மகள் தனது மாஸ்டர்ஸ் படிப்பை படித்து கொண்டிருப்பதால் அதுவும் எனக்கு ஒரு விதத்தில் எனது படிப்பை தொடர ஒரு தூண்டுதலாக இருந்தது. நமக்கு அறிவு இருந்தால் மட்டுமே நம்வாழ்வில் வெற்றி பெற முடியும், சிவில் கல்வி வாழ்வில் வெற்றியை தரும் அதுவே இந்தியாவை முன்னேற்றத்திற்கு கண்டு செல்லும்” இவ்வாறு தானி ராம் கல்வியின் முக்கியத்துவத்தை கூறி அனைவரும் தங்களது கல்வியை முழுமையாக முடிக்க வலியுறுத்தினார்.

இந்த தந்தைவை உதாரணமாக எடுத்து கொண்டு தங்கள் கல்வியை பாதியில் விட்டவர்கள் இப்போது மீண்டும் தொடரலாம்!