கல்வியை விட நன்னடத்தை மிக முக்கியம்: பிரதமர் மோடி

 

கல்வியை விட நன்னடத்தை மிக முக்கியம்: பிரதமர் மோடி

கல்வியை விட நன்னடத்தை மிக முக்கியமானது என கல்வி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

டெல்லி: கல்வியை விட நன்னடத்தை மிக முக்கியமானது என கல்வி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி விஞ்ஞான் பவனில் கல்வி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், கல்வியை விட நன்னடத்தை மிக முக்கியமானது என்றார்.

மேலும் பேசிய அவர், கல்விக்கான உட்கட்டமைப்பை வலுவாக்க மத்திய அரசு அதிக அளவில் முதலீடு செய்து வருகிறது. சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாயை கல்விக்காக மத்திய அரசு முதலீடு செய்து வருகிறது. சிறந்த கல்வியே புதிய இந்தியாவுக்கான திறவுகோல். நாட்டை கட்டமைக்க கல்வி மிக அவசியமானது என்றும் தெரிவித்தார்.

இந்திய கலாசாரத்தின் தூண்களாக வேதங்கள் திகழ்கிறது என்ற பிரதமர் மோடி, ஞானம் இன்றி வெறுமனே பட்டம் பெறுவது பயனற்றது என்றும் குறிப்பிட்டார்.