கல்லூரி மாணவர்களை கம்யூனிஸ்ட் என்று விமர்சித்த இசைஞானி!

 

கல்லூரி மாணவர்களை கம்யூனிஸ்ட் என்று விமர்சித்த இசைஞானி!

கல்லூரி விழாவில் பங்கேற்ற இசைஞானி இளையராஜா, தான் பேசும்போது விசில் அடித்த மாணவர்களை கம்யூனிஸ்ட் பார்டிகள் என கடுமையாக விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர்: கல்லூரி விழாவில் பங்கேற்ற இசைஞானி இளையராஜா, தான் பேசும்போது விசில் அடித்த மாணவர்களை கம்யூனிஸ்ட் பார்டிகள் என கடுமையாக விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் உள்ள தனியார் கல்லூரியின் நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா கலந்துக் கொண்டார். முன்னதாக அவரை வரஎவேற்று கல்லூரி மாணவிகள் பாடல்களை பாடினர். அதைத் தொடர்ந்து மாணவர்களுடன் இளையராஜா உரையாற்றினார்.

இந்நிலையில், கடந்த 1974ம் ஆண்டு மூகாம்பிகை கோவிலுக்கு சென்றது குறித்து மாணவர்களிடையே பகிர்ந்துக் கொண்டார். அப்போது அரங்கில் இருந்த மாணவர்கள் இளையராஜாவின் பேச்சுக்கு விசிலடித்துள்ளனர். இதில் கடுப்பான இளையராஜா, விசில் அடிக்கும் மாணவர்கள் கவௌள் நம்பிக்கை இல்லாத கம்யூனிஸ்ட் பார்ட்டிகள் என்று கண்டித்தார். மேலும், கைத்தட்டி விசிலடிக்க தான் பொறுக்கித்தனமாக எதுவும் சொல்லவில்லை என்றும் கடிந்துக் கொண்டார்.

ilayaraaja

இதைத் தொடர்ந்து இசை குறித்து பகிர்ந்துக் கொண்ட இளையராஜா, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை பைத்தியம் இருக்கும், நான் இசை பைத்தியம் எனக் கூறினார். இசையை நேசித்தால் வன்முறைக்கு போக தோன்றாது. மனம் அமைதியாக இருக்கும் என்றார். மேலும், சில மாணவர்களை மேடைக்கு அழைத்து ‘காற்றில் வரும் கீதமே’ பாடலை பாட வைத்து, அவர்களுடன் சேர்ந்து இளையராஜாவும் பாடினார்.