கல்லறைத் திருநாள் என்று அழைக்கப்படும் ஆன்மாக்கள் தினம் தமிழகம் முழுதும் அனுசரிக்கப்படுகிறது.

 

கல்லறைத் திருநாள் என்று அழைக்கப்படும் ஆன்மாக்கள் தினம் தமிழகம் முழுதும் அனுசரிக்கப்படுகிறது.

நமது வாழ்வு முடிவற்ற ஒரு திருப்பயணம் என்பதை மக்களுக்கு உணர்த்தும் நிகழ்வாக கல்லறை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ம் தேதி  இறந்தோரை நினைவுகூர்ந்து அவர்களுக்காக இறைவேண்டல் செய்யும் நிகழ்வினை கல்லறை தினமாக உலகம் எங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுவது வழக்கம்.

kalarai thainam

இந்நிலையில் இந்தாண்டிற்கான கல்லறை தினம் இன்று உலகம் எங்கும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது.

முன்னோர்கள் உடல் அளவில் நம்முடன் இல்லை என்றாலும் அவர்களது ஆன்மா நம்முடனே பயன்படுகிறது என்பதை உறுதி செய்யும் நிகழ்வையே இந்தக் கல்லறைத் திருநாள் வெளிப்படுத்துகிறது.

நமது வாழ்வு, இறைவன் நமக்குக் கொடுத்துள்ள மாபெரும் கொடையாகும் மாண்புமிக்க அத்தகைய வாழ்வை நல்லமுறையில் வாழ நினைவூட்டுகின்றன கல்லறைகள்.

kallaraijku

முன்னோர்களின் இறப்பு,உண்மை, அன்பு,சகோதரத்துவம் என்னும் இறையாட்சியின் விழுமியங்களைக் கட்டி எழுப்ப நடத்தப்பட்ட போராட்டங்களின் வரலாற்றுக் கல்வெட்டுக் காப்பியங்கள் என்பதை நினைவுபடுத்தவே கல்லறை தினம் அனுசரிக்கபடுகிறது. 

வாழ்வின் முடிவு மரணம் என்றாலும் அதுதான் நிலையான வாழ்வின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. இறப்புக்குப் பின்னர், இறை அமைதியில் நிம்மதி பெறவியலாத ஆன்மாக்களுக்கு பாவங்கள் தடையாக இருக்கின்றன.

அந்தத் தடைகளிலிருந்து விடுபட மன்றாட்டுகளும் (ஜெபம்), திருப்பலி (வழிபாடு) மற்றும் பிறர்மீது அன்பு செலுத்தும் செயல்களும் தேவைப்படுகின்றன.

kallarai thainm

கல்லறைத் திருநாளன்று இறந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளைச் சுத்தம் செய்து பூக்கள் தூவி, மலர் மாலை சூடி,மெழுகுவர்த்திகள் ஏற்றி, ஊதுவத்தி கொளுத்தி முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி கொள்வார்கள். 

ஒவ்வொருவரும் இறந்துபோன அவரவர் சொந்தங்களை நினைத்து அவர்களுக்காகக் கண்ணீர்விட்டு ஜெபம் செய்வார்கள். ஒருவகையில் இந்தக் கல்லறைத் திருநாள் நன்றியின் திருவிழாவாகவும் பார்க்கப்படுகிறது. மக்களிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைக் களைந்து அமைதியை நமக்கு கல்லறைகள் கற்றுத்தருகின்றன.