கல்யாண ஊர்வலத்தில் ஆர்வக்கோளாறில் பைக் வீலிங் செய்த நண்பர்…பறந்து சென்று வயலில் விழுந்த வைரல் வீடியோ!

 

கல்யாண ஊர்வலத்தில் ஆர்வக்கோளாறில் பைக் வீலிங் செய்த நண்பர்…பறந்து சென்று வயலில் விழுந்த வைரல் வீடியோ!

வீலிங் என்ற பெயரில் அதிவேகத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில்  இளைஞர்கள்  செல்வது வழக்கமாகியுள்ளது

பைக் ரேஸ் , வீலிங் என்ற பெயரில் அதிவேகத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில்  இளைஞர்கள்  செல்வது வழக்கமாகியுள்ளது. அந்த வகையில் கேரளாவில் சமீபத்தில் திருமண ஏற்பாடு ஒன்று  தடபுடலாக நடந்துள்ளது. அப்போது மணமக்கள் காரில் ஊர்வலமாகச் சென்றுள்ளனர். அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மணமகனின் நண்பர் ஒருவர்  பைக்கில் சாகசம் செய்துள்ளார்.

ttn

அதாவது பைக்கை வீலிங் செய்கிறேன் என்ற பெயரில்  ஆர்வ கோளாறில் ஈடுபட, எதிர்பாராத விதமாக நிலை தடுமாறிய அவர், அருகிலிருந்த வயலில் பறந்து சென்று விழுந்தார். இதில் சிறிய காயங்களுடன்  அந்த இளைஞர்  உயிர் பிழைத்தார் என்பது தான் வியப்பான செய்தி. 

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  சாகசம் என்ற பெயரில் அடுத்தவருக்குத்  தொல்லை கொடுப்பதே இதுபோன்ற சிலரின் வேலையாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.