கல்யாணமான 5வது நாளிலேயே  மணப்பெண் தற்கொலை! அதிர்ச்சியில் உறவினர்கள்!

கல்யாணமான 5வது நாளிலேயே  மணப்பெண் தற்கொலை! அதிர்ச்சியில் உறவினர்கள்!

கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று பெருமை பேசுகிறோம். திருமணத்திற்கு முன்பாக எந்த மண்டபத்தில் திருமணத்தை நடத்துவது, என்ன டிசைனில் புடவை வாங்குவது, எவ்வளவு சீர், யார் பந்தி பரிமாறுவது என்றெல்லாம் குடும்பமாக உட்கார்ந்து விவாதிக்கிறோம். ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் மாப்பிள்ளையைப் பிடித்திருக்கிறதா என்று கல்யாணப் பெண்ணிடம் கேட்பதே கிடையாது. அப்படியே கேட்டாலும், அவர்களின் கருத்தைச் சொன்னால், அவர்களை சமாளிக்கவே செய்கிறார்களே தவிர, அவர்களின் உணர்வுகளுக்கு மரியாதைத் தருவதில்லை.

sivashakthi

தேனி கம்பம் பகுதியைச் சேர்ந்த 18 வயதான சிவசக்தி என்ற பெண்ணுக்கு இந்த மாதம் 1ம் தேதி திருமணம் நடந்து முடிந்தது. கம்பம் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த சேதுபதி (22) என்பவரை மணந்தார். இவர்களின் வீட்டில் கீழ் பகுதியில் சேதுபதியின் பெற்றோர் வசிக்க, இவர்கள் மாடியில் தனியே வாழ்க்கையைத் துவங்கினார்கள். இந்நிலையில், திருமணம் முடிந்து 5வது நாள் வீட்டிலிருந்து காலையில் சேதுபதி வெளியே சென்று நீண்ட நேரம் கடந்தும் மருமகள் சிவசக்தி கீழே இறங்கி வராததால், புதுபெண் இவ்வளவு நேரம் சாப்பிட வராமல் மாடியில் என்ன செய்துக் கொண்டிருக்கிறாள் என்று சந்தேகமடைந்த சேதுபதியின் தாய் புஷ்பவள்ளி மாடிக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது சிவசக்தி, சுடிதார் துப்பட்டாவை மாட்டி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். நன்றாகவே  பேசி பழகி வந்த மருமகள் திடீரென தூக்கில் தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்த புஷ்பவள்ளி அலறியடித்துக் கொண்டு, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். சிவசக்தி ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறி, காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். திருமணமான ஐந்தே நாட்களில் புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இருவீட்டாரின் உறவினர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.