கலைஞர் இல்லாத முதல் தேர்தல்: ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மு.க.ஸ்டாலின்

 

கலைஞர் இல்லாத முதல் தேர்தல்: ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மு.க.ஸ்டாலின்

சென்னை தேனாம்பேட்டையில்  திமுக தலைவர் ஸ்டாலின் தனது மனைவியுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.

சென்னை : சென்னை தேனாம்பேட்டையில்  திமுக தலைவர் ஸ்டாலின் தனது மனைவியுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.

வாக்குப்பதிவு தீவிரம் 

vote

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு சரியாக இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்  தொடங்கியது.  வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்து விட்டுச் சென்றனர். அதேபோல் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், நடிகர் நடிகைகள் உள்ளிட்டோரும் வரிசையில் நின்று தங்கள் வாக்கினைப் பதிவு செய்தனர். 

நீண்ட நேரம்  வரிசையில் நின்று வாக்களித்த  ஸ்டாலின்

stalin

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது மனைவியுடன் நீண்ட நேரம்  வரிசையில் நின்று வாக்களித்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் வாக்களித்த அவர் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இது முக்கியமான தேர்தல்

stalin

அப்போது பேசிய ஸ்டாலின், ‘ வாக்காளர்கள் அனைவரும்  தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும். ஜனநாயக அடிப்படையில் ஆட்சி மாற்றத்தை உருவாக்க உங்கள் வாக்குப்பதிவே வழிவகுக்க வேண்டும். பிற தேர்தல்களை விட இது முக்கியமான தேர்தல். தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்க மக்கள் சரியாக வாக்களிக்க வேண்டும்’ என்றார்.

stalin

தொடர்ந்து அவரிடம் வாக்கு இயந்திரம் பழுதானது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, நாங்கள் புகார் மனு மட்டுமே அளிக்கமுடியும். அதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதனடிப்படையில், அந்தந்த வாக்குச்சாவடிகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அது குறித்து புகார் அளிக்கப்படும்’ என்று கூறினார். 

ஸ்டாலின் சந்திக்கும் முதல் பாராளுமன்றத் தேர்தல்

stalin

கலைஞர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு, திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதை அடுத்து இது ஸ்டாலின் சந்திக்கும் முதல் பாராளுமன்றத் தேர்தல்  என்பது குறிப்பிடத்தக்கது.

இதை வாசிக்க: 9 மணி நிலவரம்: இதுவரை 13.48 சதவிகித வாக்குகள் பதிவு; சத்யபிரதா சாஹூ தகவல்!