கலெக்டர் கார் மோதி தூக்கிவீசப்பட்ட மாணவி…பதற வைக்கும் சிசிடிவி காட்சி!

 

கலெக்டர் கார் மோதி தூக்கிவீசப்பட்ட மாணவி…பதற வைக்கும் சிசிடிவி காட்சி!

கீர்த்தனாவை மீட்டு  சிகிச்சைக்காகத்  திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பெரம்பலூர்  துறைமங்கலம் பகுதியைச் சேர்ந்த துரைராஜ். இவரது மகள் கீர்த்தனா. கீர்த்தனா  தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எட். படித்து வருகிறார். இவர் கடந்த 18 ஆம் தேதி மாலை  தங்கள் விவசாய நிலத்திற்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

car

அப்போது துறைமங்கலம் மூன்று ரோடு பகுதியை அவர் அடைந்த போது,அரியலூர் மாவட்ட ஆட்சியரின் பெற்றோர் பயணித்த, தமிழ்நாடு அரசின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார் கீர்த்தனா வந்த வாகனத்தின் மீது மோதியது. இதில் கீர்த்தனா தூக்கி வீசப்பட்டார். கார் மோதியதில் கீர்த்தனாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் கீர்த்தனாவை மீட்டு  சிகிச்சைக்காகத்  திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதை தொடர்ந்து  கார் ஓட்டுநர் செல்வராஜிடம், பெரம்பலூர் நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

car

இந்நிலையில் கீர்த்தனாவுக்கு விபத்து ஏற்பட்ட பகுதியிலுள்ள  சிசிடிவி பதிவுகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் கீர்த்தனா காற்றில் வேகமாகத் தூக்கி எறியப்படும் காட்சி  காண்போரைக் கதிகலங்க வைத்துள்ளது. 

மாணவியின் இருசக்கர வாகனம் மீது மோதிய கார் வீடியோ