கலக்குங்க பாஸ்…காந்தி சிலைக்கு எதிரே ஆசியாவின் ஆகப்பெரிய ஒயின்ஷாப்…1000 பிராண்டு சரக்குகள்..

கலக்குங்க பாஸ்…காந்தி சிலைக்கு எதிரே ஆசியாவின் ஆகப்பெரிய ஒயின்ஷாப்…1000 பிராண்டு சரக்குகள்..

தேசத் தந்தை மகாத்மா காந்தியை கவுரவப்படுத்தும் வகையில், பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியம் அருகே உள்ள அவரது சிலைக்கு எதிரே, ஆசியாவின் மிகப்பெரிய ஒயின் ஷாப் ஒன்று மிக விரைவில் துவக்கப்பட உள்ளது.வழக்கம்போல் சில சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

wineshop

அனித் ரெட்டி என்ற  தொழிலதிபர் தொடங்கவிருக்கும் இந்த மாபெரும் ஒயின் ஷாப்பின் சிறப்பம்சமே உலகில் உள்ள அத்தனை பிராண்டுகளும் இந்த ஒரே கடையில் கிடைக்கும் என்பதே. அதிக பட்சம் 10 பிராண்டுகள்ன் பெயரை மட்டுமே ஒரு சாதாரண குடிமகன் இந்தக் கடையில் உள்ள பிராண்டுகளின் எண்ணிக்கை மற்றும் விலை விபரத்தைத் தெரிந்துகொண்டால் சரக்கடிக்காமலே மயங்கி விழுவது நிச்சயம்.

இங்கு பலதரப்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1000 பிராண்டு சரக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளதாம். இரண்டே இரண்டு சரக்குகளின் விலையை சாம்பிளுக்காக தெரிந்துகொள்வோம்.’த ஜான் வாக்கர்’ ஒரு ஃபுல்லின் விலை ரூ 2,79,570. இன்னொன்று பெயரை சரியாய் உச்சரிக்கவே ஒரு குவாட்டர் அடிக்கவேண்டும் ‘சட்டீவு பெட்ரொஸ் போமெரால்’ ஒரு ஃபுல்லின் விலை ரூ.3,89,700.

wineshop

கூச்ச சுபாவமுள்ள பெண்கள் தயங்கவேண்டியதில்லை. மிகவும் அனுபவம் வாய்ந்த பெண் சிப்பந்திகள் அவர்களுக்கு உதவுவதற்கென்றே நியமிக்கட்டுள்ளார்களாம். இதே நிறுவனத்தின் உரிமையாளர் அனித்ரெட்டி ஹைதராபாத்திலும் இதுபோன்ற மிகப்பெரிய ஒயின்ஷாப் வைத்திருக்கிறார். அந்தக் கடையின் கடந்த ஆண்டு விற்பனை மட்டும் 100 கோடியைத் தொட்டதாம்.

wineshop