கர்ப்பிணிகள் மரணம், எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்; மருத்துவத்துறையிலும் கை வைத்த கார்ப்ரேட் எடப்பாடி பழனிசாமி அரசு?!

 

கர்ப்பிணிகள் மரணம், எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்; மருத்துவத்துறையிலும் கை வைத்த கார்ப்ரேட் எடப்பாடி பழனிசாமி அரசு?!

சமூக வலைதளங்களின் மூலம் ஆசிரியர்கள் பணத்தாசை பிடித்தவர்கள் என்பது போல் சித்தரித்துவிட்டார்கள். அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது பொது சமூகத்துக்கு அதிருப்தி ஏற்படும் அளவு சில ஊடகங்களும் தொடர்ந்து எழுதி அந்த போராட்டத்தை கலைத்துவிட்டது.

போக்குவரத்துத்துறை, கல்வித்துறைக்கு பிறகு மருத்துவத்துறையிலும் கை வைத்திருக்கிறது பாஜகவின் பினாமி எடப்பாடி பழனிசாமி அரசு.

பாஜக அரசாங்கம் முழுக்க முழுக்க கார்ப்ரேட் ஆதரவாக செயல்படும் அரசாங்கமாக இருந்து வருகிறது. அம்பானி, அதானி கும்பலுக்கு ஆதரவாக மோடி செயல்பட்டு வருகிறார். இந்தியா முழுமையும் தனியார்மயமாக்குவதுதான் பாஜகவின் திட்டம், அதை மெல்ல மெல்ல அனைத்து துறைகளிலும் செயல்படுத்தி வருகிறது. இந்தியன் ரயில்வேஸை தனியார்மயமாக்க சதி திட்டம் தீட்டப்படுவதாக தகவல்கள் வெளியானது. மோடி அரசாங்கம் தனியாருக்கு ஆதரவாய் செயல்படுவதை, கடந்த சில ஆண்டுகளாகவே பார்த்து வருகிறோம். ஆனால் எடப்பாடி பழனிசாமி அரசாங்கமும் இதை மறைமுகமாக, மிகத் தீவிரமாக செய்து வருகிறது.

போக்குவரத்துத்துறை

அரசு 1

போக்குவரத்து ஊழியர்கள் ஊதியம் மற்றும் பழைய ஓய்வுதீயம் வேண்டி போராட்டம் நடத்தியதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். அதன்பிறகு போக்குவரத்துத்துறையில் நடந்த மாற்றங்களையும், அதனால் அரசாங்கம் சந்திக்கும் பின்னடைவையும் சற்று உற்று கவனிக்க வேண்டும். போக்குவரத்து சேவை முழுக்க முழுக்க தனியார் கைக்கு சென்றுவிட்டது. அரசு பேருந்தை விட தனியார் பேருந்துகளில் குறைந்த தொகை மட்டுமே எக்ஸ்ட்ராவாக வசூல் செய்யப்படுகிறது. பேருந்தின் வசதியும் அரசாங்க பேருந்தை விட சொகுசாக இருக்கிறது. தற்போது பெரும்பான்மையான மக்கள் தனியார் பேருந்துகளை விரும்பி பயணிக்க துவங்கிவிட்டனர்.

கல்வித்துறை

அரசு 2

கல்வித்துறை பற்றி கேட்கவே தேவையில்லை, ஏற்கனவே அரசு கல்லூரிகள் மீதும், பள்ளிகள் மீதும் பெரும்பான்மையான மக்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், ஆசிரியர்கள் போராட்டம் பெரிதானது. சம்பளம் மற்றும் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்த, சமூக வலைதளங்களின் மூலம் ஆசிரியர்கள் பணத்தாசை பிடித்தவர்கள் என்பது போல் சித்தரித்துவிட்டார்கள். அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது பொது சமூகத்துக்கு அதிருப்தி ஏற்படும் அளவு சில ஊடகங்களும் தொடர்ந்து எழுதி அந்த போராட்டத்தை கலைத்துவிட்டது. தனியார் பள்ளிகளும், தனியார் கல்லூரிகளும் கல்லாக்கட்டவே அரசு பள்ளிகள், கல்லூரிகள் தரமற்ற கல்வி வழங்குவது போன்ற பிம்பம் கட்டமைக்கப்படுகிறது.

மருத்துவத்துறை

arasu

எடப்பாடி பழனிசாமி அரசாங்கத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை மிக மோசமான நிலையில் உள்ளது. எந்த ஒரு முறையான பராமரிப்பும் இன்றி தமிழக சுகாதாரத்துறை செயல்பட்டு வருகிறது. சுகாதாரத்தில் இந்திய தேசத்துக்கு முன்னோடியாக திகழ்ந்த தமிழகம், டெங்கு காய்ச்சலை தடுக்க முடியாமல் திணறியது. டெல்லியில் இருந்து டெங்கு கொசுக்கள் வருகிறது என்ற அருமையான விளக்கத்தை தந்தார் கள்ளக்குறிச்சி எம்பி காமராஜ். 

dengue

எடப்பாடி பழனிசாமி அரசாங்கத்தில் தமிழக மருத்துவத்துறை சந்தித்த அவமானங்கள் கொஞ்ச நஞ்சமல்ல, கெட்ட ரத்தம் ஏற்றப்பட்டதால் 15 கர்ப்பிணிகள் இறந்தது, தவறாக ஒரு பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டது என பல்வேறு தவறுகளை சுட்டிக்காட்டலாம்.

அ

இவையெல்லாம் எதற்காக என்றால், மருத்துவத்துறையையும் முழுக்க முழுக்க கார்ப்ரேட்களுக்கு தாரை வார்க்கதான். புதிதாய் அரசியலுக்கு வருபவர்கள் எல்லாம் கல்வி, மருத்துவத்துறையின் குறைபாடை சொல்லி அரசியல் பேசும் அளவு தமிழகத்தின் நிலைமை மாறிவிட்டது.

இந்த தனியார்மயமாக்கும் திட்டம் எடப்பாடி பழனிசாமியின் தனிப்பட்ட திட்டமல்ல, அது பாஜக அரசாங்கத்திடம் இருந்து வந்தது. மோடி அரசாங்கம் தமிழக அரசாங்கத்துக்கு கற்றுத் தந்தது. இவையெல்லாம் தமிழக மக்களால் பொது வெளியில் விமர்சிக்கப்படும் விஷயங்கள் ஆகும்.

இதையும் வாசிங்க

சிறு குழந்தைகள் மீது கைவைத்தால் நாக்கு வெளியே பிதுங்க தூக்கில் போடணும்!